Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 29 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 29 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 29 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா


















    ��


    எம்பெருமானே ! ப்ரபத்தி செய்தவர்களின் பெருமையில் , ஒரு சிறு பகுதி கூட , மற்ற உபாயங்களால் அடைய முடியாது !






    ��




    ��






    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��






    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��



    मन्त्रै: - अनुश्रव , मुखेषु - अधिगम्यमानै: ;

    स्व - अधिक्रिया , समुचितै: - यदि , वा - (अ)न्य , वाक्यै: ।

    नाथ ! त्वदीय , चरणौ , शरणम् , गतानाम् ;

    न - एव - अयुत - अयुत , कला - (अ)पि - अपरै: - अवाप्या ! ॥


    ��


    மந்த்ரை: - அநுஶ்ரவ , முகேஷு - அதிகம்யமாநை: ;

    ஸ்வ - அதிக்ரியா , ஸமுசிதை: - யதி , வா - (அ)ந்ய , வாக்யை: |

    நாத ! த்வதீய , சரணௌ , ஶரணம் , கதாநாம் ;

    ந - ஏவ - அயுத - அயுத , கலா - (அ)பி - அபரை: - அவாப்யா ! ||



    ��



    नाथ .............. ஸ்வாமி !

    स्व ................ தங்கள் ,

    अधिक्रिया ....... தகுதிக்கு ,

    समुचितै: ......... ஏற்றவையான ;

    अनुश्रव ........... வேதம் ,

    मुखेषु ............. முதலியவற்றில் ,

    अधिगम्यमानै: ... ஓதப்படுகின்ற ;

    मन्त्रै: .............. மந்த்ரங்களால் ,

    यदि वा ........... அல்லது ,

    अन्य .............. மற்ற ,

    वाक्यै: ............ வாக்யங்களால்;

    त्वदीय ............ உனது ,

    चरणौ ............. திருவடிகளை ;

    शरणम् ............ சரணம் ,

    गतानाम् .......... அடைந்தவர்களின் (பெருமையின் ) ;

    अयुत अयुत ...... கோடி கோடியில் ,

    कला अपि ........ ஒரு பகுதி கூட ;

    अपरै: ............. மற்றவர்களால் ,

    अवाप्या .......... அடையவே ,

    न एव .............. முடியாது !


    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��


    * விளக்கொளி எம்பெருமானே !


    * பிரபத்தியைச் செய்வதற்கு , சில மந்திரங்கள் உண்டு . இந்த மந்த்ரங்கள் , வேதங்களிலும் ஸ்ரீ பாஞ்சராத்திரம் முதலிய ஸம்ஹிதைகளிலும் உள்ளன .


    * இந்த மந்திரங்களில் , அவரவர் தகுதிக்கு ஏற்றவற்றைக்கொண்டு , பிரபத்தியைச் , செய்ய வேண்டும் . இவற்றை உச்சரிப்பதற்குச் , சாதி வரையறையும் , உண்டு .


    * இந்த மந்திரங்களைச் சொல்லத் , தகுதி இல்லாதவர்கள் , தங்களுக்கு உரிய , ஆழ்வார் , ஆச்சார்யர்களின் , ஸ்ரீ ஸூக்தி வாக்கியங்களைக் கொண்டும் , பிரபத்தி செய்யலாம் .


    * இப்படி , இந்த மந்த்ரங்களைக் கொண்டாவது , மற்ற வாக்கியங்களை கொண்டாவது , உன் திருவடிகளில் , ப்ரபத்தி செய்தவர்களின் பெருமையை நோக்கினால் , இவர்களது பெருமையில் , கோடியில் ஒரு பங்கு கூட , மற்ற உபாயங்களைச் செய்பவர்களால் , பெறவே முடியாது , என்பது விளங்கும்.





    ��





    Last edited by sridharv1946; 20-01-19, 16:18.
Working...
X