Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 26 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 26 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 26 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    பெரியோர்கள் , "பக்தி யோகத்தை விட , ப்ரபத்தியே உயர்ந்தது" என்று கூறுவர் !






    ��









    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��








    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��
    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��


    नित्य - अलस - अर्हम् ; अभयम् ; निरपेक्षम् - अन्यै: ;

    विश्व - अधिकारम् ; अखिल - अभिमत , प्रसूतिम् ; |

    शिक्षा , विशेष , सुभगम् ; व्यवसाय , सिद्धा: ;

    सत्कुर्वते ! त्वयि , मुकुन्द ! षट् - अंग , योगम् ॥



    ��




    நித்ய - அலஸ - அர்ஹம் ; அபயம் ; நிரபேக்ஷம் - அந்யை: ;

    விஶ்வ - அதிகாரம் ; அகில - அபிமத , ப்ரஸூதிம் ; |

    ஶிக்*ஷா , விஶேஷ , ஸுபகம் ; வ்யவஸாய , ஸித்தா: ;

    ஸத்குர்வதே ! த்வயி , முகுந்த ! ஷட் - அங்க , யோகம் ||



    ��


    मुकुन्द ........ எம்பெருமானே !

    नित्य ......... எப்பொழுதும் ,

    अलस ........ சோம்பேறிகளும் ,

    अर्हम् ......... செய்யக்கூடியதும் ;

    अभयम् ....... அஞ்சுவதற்குத் தேவை , இல்லாததும் ;

    अन्यै: ......... மற்றவற்றைத் ,

    निरपेक्षम् ..... துணை கொள்ள வேண்டாததாயும் ;

    विश्व ......... எல்லாரும் ,

    अधिकारम् ... செய்யக் கூடியதும் ;

    अभिमत ...... விரும்பிய ,

    अखिल ....... எல்லாவற்றையும் ,

    प्रसूतिम् ....... தர வல்லதும் ;

    विशेष ......... நல்ல ,

    शिक्षा ......... பயிற்சியால் ,

    सुभगम् ....... செய்வதற்கு , எளியதாயும் ;

    त्वयि .......... உன்னிடம் , செய்யப் படுவதுமான ;

    षट् ............ ஆறு ,

    अंग ........... அங்கங்களை ,

    योगम् ......... உடைய பிரபத்தியை ;

    व्यवसाय ..... மன உறுதி ,

    सिद्धा: ........ உடையவர்கள் ;

    सत्कुर्वते ...... சிறந்ததாக , மதிக்கின்றனர் !


    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * விளக்கொளி எம்பெருமானே !


    * உறுதியான , மனநிலை உடைய , பெரியோர்கள் , பக்தி யோகத்திற்கு , இல்லாத பெருமைகள் , பிரபத்திக்கு இருப்பதை , அறிந்து , தங்களுக்கு , பிரபத்தியே ஏற்றது என , உணர்ந்து , அதில் பெருமதிப்பு கொள்கின்றனர் .


    * பக்தியோகம் :


    . சோம்பல் உடையவர் , செய்ய முடியாது .


    . செய்யும்போது , பல தடைகள் , நேருவதால் , முழுவதும் , நிறைவேற வேண்டுமே , என்ற அச்சத்திற்கு , இடமுண்டு .


    . கர்மயோகம் , ஞான யோகம் , மற்ற அங்கங்கள் ஆகியவை , செவ்வனே நிறைவேறுவதையும் , பக்தி யோகம் எதிர்பார்க்கும் .


    . மேலும் , அதை , அந்தணர் , அரசர் , வைசியர் ஆகிய , மூன்று சாதியினரே , செய்யலாம் .


    . விரும்பிய , எல்லா பலன்களையும் , விரைவில் , அளிக்கவல்லது அன்று .


    . எவ்வளவு கற்றுச் , செய்து பழகினாலும் , அதை செய்வது கடினமாகத்தான் இருக்கும் .


    * பிரபத்தி :


    . அதற்கு , மாறான தன்மை , உடையது .


    . எப்பொழுதும் , சோம்பல் உடையவரும் , பிரபத்தி செய்வதற்கு உரியர் .


    . க்ஷண காலத்திலே , இது நிறைவேறி விடுவதால் , தடைகளுக்கும் , அவற்றால் வரும் , அச்சத்திற்கும் , இடமில்லை .


    . இதற்கு ஏற்பட்ட , ஐந்து அங்கங்களை அன்றி , வேறொன்றையும் இது வேண்டாது .


    . ஜாதி வரையறையின்றி , எல்லா ஜாதியினரும் , இதை செய்யலாம் .


    . விரும்பிய , எல்லா பலன்களையும் , விரைவில் இது அளிக்கவல்லது .


    . ஆசாரியனுடைய நல் உபதேசம் , பெற்றால் , இதைச் செய்வது , மிக எளிது .


    * இப்படி , எல்லா விஷயங்களிலும் , பக்தியோகத்தை விட , சிறந்ததாய் , உன் திருவடிகளில் , செய்யப்படுவதாய் உள்ள , பிரபத்தி , மகா விசுவாசமுள்ள அறிஞர்கள் , பெருமதிப்பு கொண்டு , போற்றுகின்றனர் .


    * ஐந்து அங்கங்களுடன் , பிரபத்தியையும் கூட்டி , ஆறு அங்கங்கள் உடையது , என்று கூறுவது வழக்கு .


    [* ப்ரபத்தியின் ஐந்து அங்கங்கள் :


    1. ஆநுகூல்ய ஸங்கல்பம் .


    2. ப்ராதிகூல்ய வர்ஜனம் .


    3. மகா விசுவாஸம் .


    4. கோப்த்ருத்வ வர்ணனம் .


    5. கார்ப்பண்யம் . என்பன .


    விளக்கம் அடுத்த ஸ்லோக உரையில் காண்க]




    ��






    ��


    Last edited by sridharv1946; 20-01-19, 15:59.
Working...
X