Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 25 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 25 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    🙏



    श्री शरणागति दीपिका : 25 / 59


    🙏




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    🙏


    யோகி சிந்த்யனே ! யோகிகள் , ப்ரபத்தியால் , உன் மூலமாகப் , பலனைப் , பெறுகின்றனர் !








    🙏





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    🙏


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    🙏

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    🙏


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    🙏


    उद्बाहु , भावम् - अपहाय , यथा - एव , खर्वै: ,

    प्राम्शुम् , फलार्थम् - अभियाचति , योगि , चिन्त्य ! |

    एवम् , सुदुष्करम् - उपाय , गणम् , विहाय ,

    स्थाने , निवेशयति ! तस्य , विचक्षण : - त्वाम् ॥



    🙏



    உத்பாஹு , பாவம் - அபஹாய , யதா - ஏவ , கர்வை: ,

    ப்ராம்ஶும் , பலார்த்தம் - அபியாசதி , யோகி , சிந்த்ய ! |

    ஏவம் , ஸுதுஷ்கரம் - உபாய , கணம் , விஹாய ,

    ஸ்த்தாநே , நிவேஶயதி ! தஸ்ய , விசக்ஷண: - த்வாம் ||



    🙏



    योगि .......... யோகிகளால் ,

    चिन्त्य ......... தியானிக்க , உரியவனே !

    खर्व: ........... குள்ளன் ,

    फलार्थम् ...... பழத்திற்காக ,

    उद्बाहु .......... உயரத்தில் , தன் கைகளை ,

    भावम् ......... தூக்கி நிற்றலை ,

    अपहाय ....... விட்டு ,

    प्राम्शुम् ........ உயரமான , ஒருவனை ;

    यथा एव ....... எப்படி ,

    अभियाचति ... வேண்டுகிறானோ ;

    एवम् ........... இவ்வாறு ,

    विचक्षण: ...... புத்திமான் ,

    सुदुष्करम् ...... செய்வதற்குக் கடினமான ,

    उपाय ........... மற்ற உபாயங்களின் ,

    गणम् ........... தொகுதியை ,

    विहाय .......... கை விட்டு ;

    तस्य ............ அதன் ,

    स्थाने ........... ஸ்தாந்த்தில் ,

    त्वाम् ............ உன்னை

    निवेशयति ...... நிறுத்துகிறான் !


    🙏


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    🙏

    * யோகிகளின் தியானத்துக்குரிய , விளக்கொளி எம்பெருமானே !


    * ஒரு குள்ளன் , மரத்தில் பழுத்த கனியைப் , பறிக்க விரும்புகிறான் . தானே , தன் கைகளை உயரத் தூக்கி , எட்டிப் பறிக்க , அவனால் முடியாது .


    * அதற்காக , வீண் முயற்சி கொள்ளாமல் , உயரமான ஒருவனைப் , பறித்துத் தரச்சொல்லிப் , பழங்களைப் , பெறுகிறான் .


    * அவ்வாறே , புத்திமானான சேதனன் , கர்மயோகம் , ஞான யோகம் , இவற்றை செய்வதும் , பின்பு பக்தியோகத்தைச் , செய்வதும் , தனக்குக் கடினம் என உணர்கிறான் .


    * அவற்றில் , முயற்சி கொள்ளாமல் , பிரபத்தியால் , அவற்றின் ஸ்தானத்தில் , உன்னையே நிறுத்தி , வேண்டிய பலனைப் , பெறுகிறான் !












    🙏

Working...
X