Niti-187 மேன்மையடைய ப்ரதக்ஷிணம் செய்க
गुरुं गां दैवतं तीर्थं घृतं मधु चतुष्टयम् |
प्रदक्षिणं प्रकुर्वीत प्रज्ङातां च वनस्पतीन् ||
குரும் காம் தைவம் தீர்த்தம் மது சதுஷ்டயம் |
ப்ரதக்ஷிணம் ப்ரகுர்வீத ப்ரஜ்ஞாதாம் ச வநஸ்பதீந் ||
பொருள் :
வாழ்வில் நன்மையையும் மேன்மையையும் அடைய விரும்புபவன்
குரு, பசு, தைவம், தீர்த்தம், நெய், தேன் மற்றும் வயதான மரம்
இவற்றை கடக்கும்போது ப்ரதக்ஷிணமாகச் செல்லவேண்டும்.
குறிப்பு:- அதுபோல் ஒருவருக்கு மேல் ப்ராஹ்மணர்கள் இருந்தாலும், தம்பதிகள் இருந்தாலும்
இடையில் குறுக்கே செல்லாமல் ப்ரதக்ஷிணமாகச் செல்லவேண்டும்.
(அப்படிச் சென்றால் புண்யமும், மாறாகச் சென்றால் செல்பவரின் அல்ப புண்யமும்
அவர்களைச் சென்றடையும்).