Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 17 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 17 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 17 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    விளக்கொளி எம்பெருமானே ! பல அவதாரங்களால் , தர்மத்தை , நிலை நாட்டுகிறாய் !




    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��



    नानाविधै: - अकपटै: , अजहत् , स्वभावै: ;

    अप्राकृतै: - निज , विहारवशेन , सिद्धै: ।

    आत्मीय , रक्षण ; विपक्ष , विनाशन - अर्थै: ;

    संस्थापयसि ! अनघ , जन्मभि: - आद्य ,धर्मम् ॥


    ��


    நாநாவிதை: - அகபடை: ; அஜஹத் , ஸ்வபாவை: ;

    அப்ராக்ருதை: , நிஜ , விஹார வஶேந , ஸித்தை: |

    ஆத்மீய , ரக்ஷண ; விபக்ஷ , விநாஶந - அர்த்தை: ;

    ஸம்ஸ்த்தாபயஸி ! அநக , ஜந்மபி: - ஆத்ய , தர்மம் ||


    ��


    नानावि.......... பல்வகை , ஆனதும் ,

    अकपटै: ........ ஸத்யமானவை , ஆனதும் ,

    स्वभावै: ........ தனது தன்மைகளை ,

    अजहत् ......... விடாதவை ஆனதும் ,

    अप्राकृतै: ...... ஐந்து பூதங்களால் ஆகாதவை , ஆனதும் ,

    निज ............ தனது ,

    विहारवशेन ..... லீலையாய் ,

    सिद्धै: ........... ஏற்பட்டவையும் ,

    आत्मीय ........ அடியார்களைக் ,

    रक्षण ........... காப்பதற்கும் ,

    विपक्ष .......... பகைவர்களை ,

    विनाशन ....... அழிப்பதற்கு ,

    अर्थै: ........... ஏற்பட்டவையும் ,

    अनघ .......... குற்றம் அற்றனவாயும் , உள்ள ,

    जन्मभि: ....... அவதாரங்களால் ,

    आद्य ........... க்ருத யுகத்தின் ,

    धर्मम् ........... தர்மத்தை ,

    संस्थापयसि ... நன்கு , நிலை நாட்டுகிறாய் !


    ��



    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * விளக்கொளி எம்பெருமானே !

    1. நீ , உலகில் , அதர்மம் , தலை எடுக்கும் போதெல்லாம் , பல்வேறு திரு மேனிகளுடன் , பற்பல அவதாரங்களைச் , செய்கிறாய் .

    2. நீ , கொள்கின்ற திருமேனிகள் , இந்திரஜாலம் போல் , பொய்யானவை அல்ல . உண்மையாய், இருப்பன .

    3. மேலும் , உனக்கு , இயற்கையாய் , உள்ள தன்மைகளை , நீ , அவதார காலத்தில் , விடுவதில்லை . அத்தன்மையுடனேயே , அவதரிக்கிறாய் .

    4. உன் திருமேனிகள் , எங்கள் சரீரம் போல் , பஞ்சபூதங்களால் ஆனவை அல்ல . ரஜஸ் , தமஸ் கலவாத , சுத்த ஸத்துவத்தால் ஆனவை .

    5. மேலும் , அவை எங்கள் சரி இருந்து கர்மத்தால் ஏற்படுவது அல்ல . உன் ஸங்கல்பத்தாலேயே , ஏற்படுவன.

    6. மேலும் , அவை எங்கள் சரீரம் போல் , கர்ம பலனை , அனுபவிப்பதற்கு தோன்றுவன அல்ல . உன் அடியார்களை காப்பதற்கும் , அவர்களுடைய எதிரிகளான துஷ்டர்களை , அழிக்கவும் .வருபவனை .

    * இப்படித் , தூய்மையான , பற்பல அவதாரங்களைச் செய்து , உலகில் , அதர்மத்தை அழித்து , பழமையான க்ருத யுக தர்மத்தை , நிலைநாட்டுகிறாய் .

    [இந்த ஸ்லோகத்தில் , அவதார ரஹஸ்யத்தின் , ஆறு அம்சங்கள் , அடங்கி இருத்தலைக் காண்க ]






    ��



Working...
X