Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 15 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 15 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ


    🙏



    श्री शरणागति दीपिका : 15 / 59


    🙏




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    🙏


    தீப ப்ரகாசனே ! எங்களை நல்வழியில் நடத்த , நீ , முயல்கிறாய் !








    🙏





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    🙏





    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    🙏

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    🙏


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    🙏




    निद्रायितान् ; निगम , वर्त्मनि ; चारु , दर्शी ;

    प्रस्थान , शक्ति , रहितान् ; प्रतिबोध्य , जन्तून् ; ।

    जीर्ण , स्तनंध्य , जड - अन्ध , मुखान् , इव - अस्मान् ;

    नेतुम् ; मुकुन्द ! यतसे ! दयया सह ; त्वम् ॥


    🙏




    நித்ராயிதாந் ; நிகம , வர்த்மநி ; சாரு , தர்ஶீ ;

    ப்ரஸ்த்தாந , ஶக்தி , ரஹிதாந் ; ப்ரதிபோத்ய ; ஜந்தூந் ; |

    ஜீர்ண , ஸ்தநந்தய , ஜட - அந்த , முகாந் , இவ - அஸ்மாந் ;

    நேதும் ; முகுந்த ! யதஸே ! தயயா ஸஹ ; த்வம் ||



    🙏




    मुकुन्द .......... எம்பெருமானே !

    चारु ............. நல்ல ,

    दर्शी ............ நோக்கம் உடைய ,

    त्वम् ............. நீ ,

    दयया सह ...... கருணை உடன் ;

    निगम ........... வேதம் ,

    वर्त्मनि .......... கூறும் வழியில் ,

    निद्रायितान् .... (செல்லாமல் ) உறங்கும் ;

    प्रस्थान ......... ( அவ்வழியில் ) நடக்க ,

    शक्ति .......... சக்தி

    रहितान् ........ அற்றவர்களான ,

    जीर्ण ........... வயது முதிர்ந்தவர்கள் ,

    स्तनंध्य ........ குழந்தைகள்,

    जड ............ அறிவு அற்றவர்கள் ,

    अन्ध ........... குருடர்கள் ,

    मुखान् ......... முதலிய ,

    जन्तून् इव ..... பிராணிகளப் போன்ற ,

    अस्मान् ........ எங்களைத் ,

    प्रतिबोध्य ...... தட்டி எழுப்பி ,

    नेतुम् ........... நல்ல வழியில் நடத்த ,

    यतसे .......... முயல்கிறாய் !


    🙏


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    * விளக்கொளி எம்பெருமானே !

    * உலகில் , மனிதர் , வழியில் நடப்பதற்கு , வழி , தெரிய வேண்டும் . பயணம் போக , சக்தியும் வேண்டும் .

    * அவ்வாறு , வேதம் விதிக்கும் வழியில் , நடக்கவும் ; ஞானமும் , சக்தியும் , வேண்டும் .

    * பலருக்கு , நல்ல அறிவு இல்லை . சிலருக்கு அறிவிருந்தும் , வேத விதிப்படி , நடக்க , சக்தி இருப்பதில்லை .

    * எங்களுக்கு , அறிவு , சக்தி இரண்டுமில்லை , ஆதலின் ; கிழவர் , குழந்தை , மூடர் , குருடர் முதலிய பிராணிகளைப் போல் , வழி காட்டப் பட வேண்டிய , நிலையில் உள்ளோம் .

    * பயணம் போக வேண்டியவர்கள் , உறங்கினால் , அவர்களை தட்டி எழுப்புவது முறைதானே?

    * இப்படி , உறக்க நிலையில் , உள்ள எங்களுக்காக , கருணையே துணை கொள்கிறாய் .

    * நன்மை புரிவதிலேயே , நோக்கமுடைய நீ , உறக்கத்தில் உள்ள எங்களை , தட்டி எழுப்புகிறாய் . பின் , ப்ரபத்தி என்னும் நல் வழி காட்டி , அதில் , நடக்கச் செய்கிறாய் .

    * இதுதானே , வேதம் விதித்த வழி ! இவ்வாறு , எங்களை , மோட்சம் பெற செய்வதில் , முயற்சி கொள்கிறாய் .

    * என்னே , உன் குளிர்ந்த நோக்கம் !




    🙏





    🙏















    Sent from my iPad
Working...
X