Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 14 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 14 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    🙏



    श्री शरणागति दीपिका : 14 / 59


    🙏




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா


















    🙏


    எம்பெருமான் , சேதனர்களை , உய்விக்க , தானே , விரைகிறான் !






    🙏








    🙏






    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    🙏



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    🙏







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    🙏



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    🙏


    कर्मसु - अनादि , विषमेषु , समो ; दयालु: ;

    स्वेन - एव , क्लुप्तम् - अपदेशम् - अवेक्षमाण: ।

    स्व , प्राप्तये ; तनु , भृताम् ; त्वरसे ! मुकुन्द !

    स्वाभाविकम् , तव , सुहृत्त्वम् - इदम् ; गृणन्ति ! ॥

    🙏


    கர்மஸு - அநாதி , விஷமேஷு ; ஸமோ ; தயாளு: ,

    ஸ்வேந - ஏவ , க்லுபதம் - அபதேஶம் - அபேக்ஷமாண: |

    ஸ்வ , ப்ராப்தயே ; தநு , ப்ருதாம் ; த்வரஸே ! முகுந்த !

    ஸ்வாபாவிகம் , தவ , ஸுஹ்ருத்த்வம் - இதம் ; க்ருணந்தி ! ||


    🙏


    मुकुन्द .......... எம்பெருமானே !

    तनु .............. சரீரம் ,

    भृताम् ........... பெற்ற சேதநர்க்கு ;

    अनादि .......... அநாதியும் ,

    विषमेषु .......... வெவ்வேறு வகைப்பட்டதும் ஆன ,

    कर्मसु ........... கர்மங்களில் ;

    समो ............. ஸமமாய் நடப்பவனும் ;

    दयालु: .......... கருணை நிறைந்தவனுமான (நீ) ;

    स्वेन एव ......... தன்னாலேயே ,

    क्लुप्तम् .......... உருவாக்கப்பட்ட ,

    अपदेशम् ........ சிறு வியாஜத்தை ,

    अवेक्षमाण: .... எதிர்பார்த்து ;

    स्व ............... தன்னிடம் ,

    प्राप्तये .......... அடைவிப்பதற்கு ;

    त्वरसे ............ விரைகிறாய் !

    इदम् ............. இது ,

    तव ............... உனது ,

    स्वाभाविकम् .... (சேதனர்கள் பால் இருக்கும் ) இயற்கையான ,

    सुहृत्त्वम् .......... நட்புச் செயல் எனக் ;

    गृणन्ति ........... (மஹரிஷிகள் ) கூறுகின்றனர் !


    🙏


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    🙏


    * விளக்கொளி எம்பெருமானே !

    * ஜீவாத்மாக்கள் , தங்கள் முந்திய வினையால் , சரீரத்தை பெறுகின்றனர் .

    * அவர்களுடைய கர்மங்கள் , அனாதியாய் , பல்வகைப்பட்டவை. அவை , பல்வகையான பலன்களையும் , அளித்து வருகின்றன .

    * இயற்கையில் , உனக்கு , ஒருவரிடமும் , விருப்போ , வெறுப்போ இல்லை . நீ , எல்லோரிடமும் , ஸமமாக , நடந்து கொள்பவனே.

    * ஆயினும் , நீ , கர்மத்துக்குத் தக்கவாறு தானே , பலன் கொடுக்க முடியும் ?

    * உன் கருணையோ , எல்லையற்றது . ஆயினும் , ஓர் உபாயத்தையும் , செய்யாதிருக்க , நீ சேதனனுக்கு , மோக்ஷம் கொடுத்தால் , எல்லோருக்கும் கொடுக்கும்படி , வரும் .

    * சிலருக்கு மட்டும் , கொடுத்தால் , நீ பக்ஷபாதம் உள்ளவன் என்று முடியும் .

    * ஆதலால் , சேதனன் செய்யும் , பிரபத்தி என்னும் , எளிதான சாதனத்தை , எதிர்பார்க்கிறாய் .

    * அவன் செய்யும் உபாயமும் , நீ செய்வதே ஆகும் .

    * அந்த உபாயத்தைச் , செய்யச் செய்து , உடனே மோக்ஷம் கொடுக்க விரைகிறாய் .

    * நீ இங்ஙனம் செய்தலையே , இயற்கையில் , உனக்கு சேதனன் விஷயத்தில் , ஏற்பட்ட , நட்புச் செயலாக , மஹரிஷிகள் கூறுகின்றனர்.



    🙏


    Last edited by sridharv1946; 24-10-18, 09:34.
Working...
X