श्री शरणागति दीपिका : 12 / 59
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
விளக்கொளி எம்பெருமானே ! ஸாதுக்கள் , உன்னைச் சரணம் அடைந்து , உன்னை , நன்கு , அனுபவிக்கின்றனர் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
त्वाम् , मातरम् च , पितरम् , सहजम् , निवासम् ;
सन्त: ; समेत्य , शरणम् , सुहृदम् , गतिम् च ।
नि:सीम , नित्य , निरवद्य , सुख , प्रकाशम् ;
दीपप्रकाश ! सविभूति , गुणम् , विशन्ति ! ॥
த்வாம் , மாதரம் ச , பிதரம் , ஸஹஜம் , நிவாஸம் ;
ஸந்த: ; ஸமேத்ய , ஶரணம் , ஸுஹ்ருதம் , கதிம் ச |
நி:ஸீம , நித்ய , நிரவத்ய , ஸுக , ப்ரகாஶம் ;
தீபப்ரகாச ! ஸவிபூதி , குணம் , விஶந்தி ! ||
दीपप्रकाश ..... விளக்கொளி எம்பெருமானே !
सन्त: ............ ஸாதுக்கள் ,
त्वाम् ............. உன்னை ;
मातरम् .......... தாய் ஆகவும் ,
पितरम् च ....... தந்தை ஆகவும் ,
सहजम् ........... உடன் பிறந்தவன் ஆகவும் ,
निवासम् .......... உறைவிடம் ஆகவும் ,
सुहृदम् ........... தோழன் ஆகவும் ,
गतिम् च .......... அடையப்படும் , பலன் ஆகவும் ,
शरणम् ........... சரணம் ,
समेत्य ............ அடைந்து ;
नि:सीम ........... எல்லை இல்லாததும் ,
नित्य .............. நித்யம் ஆனதும் ஆன ,
निरवद्य ............ துக்கம் கலவாத ,
सुख ............... ஆனந்தத்தையும் ,
प्रकाशम् .......... ஞானத்தையும் , உடையவன் ஆகவும் ,
सविभूति गुणम् .. ஆளப்படும் பிரபஞ்சம், குணம் இவற்றுடன் கூடியவனாகவும் ;
विशन्ति ........... அனுபவிக்கின்றனர் !
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* விளக்கொளி எம்பெருமானே !
* உண்மை அறிவு பெற்ற , ஸாதுக்கள் , உன்னைத் , தாயாகவும் , தந்தையாகவும் , ஸஹோதரனாகவும் , ஆதாரமாகவும் , தோழனாகவும் , அடையப்படும் பலனாகவும் , கொண்டு உன்னைச் சரணமடைகின்றனர் .
* இந்த சரணாகதிக்குப் , பலனாய் , ஸ்ரீவைகுண்டத்தில் , இடைவிடாது , அனுபவிக்கின்றனர்
.
* எவ்வாறு எனில் :
. எல்லையற்றதாய் , அழிவற்றாதய் , துக்கம் கலவாததாய் , உள்ள , ஆனந்தத்தையும் , ஞானத்தையும் , உடையவனாகவும் , லீலா விபூதி , நித்ய விபூதி , இவற்றை ஆள்பவனாகவும் , கணக்கற்ற , திருக் கல்யாண குணங்களை , உடையவனாக , உன்னைக் கண்டு , பரமபதத்தில் , பரிபூரணமாய் , அனுபவிக்கின்றனர் .
(லீலா விபூதி : இந்த பிரபஞ்சம் . நித்ய விபூதி : ஶ்ரீவைகுண்டம்)