श्री शरणागति दीपिका : 09 / 59
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
தீப - அவபாஸனே ! நீயே , முதல் ஜகத் குரு !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
दीप - अवभास ! दयया , विधि , पूर्वम् - एतत् ;
विश्वम् , विधाय ; निगमान् - अपि , दत्तवन्तम् ; ।
शिष्यायिता: , शरणयन्ति ! मुमुक्षव: , त्वाम् ,
आद्यम् , गुरुम् , गुरु , परम्परया - अधिगम्यम् ॥
தீப - அவபாஸ ! தயயா , விதி , பூர்வம் - ஏதத் ;
விஶ்வம் , விதாய ; நிகமாந் - அபி , தத்தவந்தம் ; |
ஶிஷ்யாயிதா: , ஶரணயந்தி ! முமுக்ஷவ: , த்வாம் ,
ஆத்யம் , குரும் , குரு , பரம்பரயா - அதிகம்யம் ||
दीप अवभास .... விளக்கொளி எம்பெருமானே !
दयया ............. கருணையால் ,
एतत् .............. இந்த ,
विश्वम् ............ ப்ரபஞ்சத்தை ;
विधि .............. பிரமனை ,
पूर्वम् .............. முதலாக வைத்து ,
विधाय ........... படைத்தவனும் ;
निगमान् अपि .... வேதங்களையும் ,
दत्तवन्तम् ......... உபதேசித்தவனும் ;
गुरु ............... ஆசார்யர்களின் ,
परम्परया ......... வரிசை முறையால் ,
अधिगम्यम् ....... வழிபடத் தகுந்தவனும் ;
आद्यम् ............ முதல் ,
गुरुम् ............. ஆசார்யனாக உள்ளவனும் ஆன ;
त्वाम् .............. உன்னை ;
मुमुक्षव: .......... மோக்ஷத்தை , விரும்புபவர்கள் ,
शिष्यायिता: ..... சீடர்களாக ஆகி ,
शरणयन्ति ....... சரணம் அடைகின்றனர் !
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* விளக்கொளி எம்பெருமானே !
* நீ , உனது இயற்கைக் கருணையால் , முதலில் , பிரமனைப் படைத்தாய் .
* அவனுக்கு , வேதங்களை , உபதேசித்தாய் !
* அவனைக் கொண்டு , இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் , படைத்து அருளினாய் !
* ஞானோபதேசம் செய்யும் , ஆசாரிய பரம்பரையை , நோக்கினால் , அதில் , நீயே , சரணம் அடைய தகுந்த , முதல் ஆச்சார்யனாக , விளங்குகிறாய் .
* மோக்ஷத்தை , விரும்பும் , ஸாதுக்கள் , இத்தகைய உனக்குச் , சிஷ்யர்களாக ஆகி , உன்னைச் , சரண் அடைகின்றனர்.