Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 06 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 06 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 06 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    விளக்கொளி எம்பெருமானே ! உன்னை , புருஷோத்தமனாக , அறிந்தவன் , எல்லாம், அறிந்தவன் !


















    ��









    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��


    आविश्य , धारयसि , विश्वम् ; अमुष्य , यन्ता ;

    शेषी ; श्रिय: , पति: ; अशेष , तनु: ; निदानम् ; ।

    इति - आदि , लक्षण , गणै: , पुरुषोत्तमम् , त्वाम् ;

    जानाति , यो ; जगति , सर्ववित् ; एष ; गीत: ; ||


    ��


    ஆவிஶ்ய , தாரயஸி , விஶ்வம் ; அமுஷ்ய , யந்தா ;

    ஶேஷீ ; ஶ்ரிய: , பதி: ; அஶேஷ , தநு: ; நிதாநம் ;

    இதி - ஆதி , லக்ஷண , கணை: , புருஷோத்தமம் , த்வாம் ;

    ஜாநாதி , யோ ; ஜகதி , ஸர்வவித் ; ஏஷ ; கீத: ; ||


    ��


    विश्वम् ........... உலகத்தை ,

    आविश्य ......... உள்ளே , புகுந்து ,

    धारयसि ......... தாங்குபவன் ஆகவும் ;

    अमुष्य ........... இந்த உலகத்தை ,

    यन्ता ............. நியமிப்பவன் ஆகவும் ;

    शेषी ............. ஸ்வாமியாகவும் ;

    श्रिय: ............ பெரிய பிராட்டிக்கு ,

    पति: ............. நாயகன் ஆகவும் ;

    अशेष ........... அனைத்திற்கும் ,

    तनु: ............ சரீரமாகவும் ;

    निदानम् ........ ஆதி காரணம் ஆகவும் , உள்ளாய் !

    इति आदि ...... இவை முதலிய ,

    लक्षण गणै: .... பற்பல அடையாளங்களால் ,

    य: ............... யார் ,

    त्वाम् ............ உன்னை ,

    पुरुषोत्तमम् ..... புருஷோத்தமனாக ,

    जानाति ........ அறிகிறானோ ;

    एष: ............ இவன் ,

    जगति ......... இந்த உலகில் ,

    सर्ववित् ........ எல்லாம் அறிந்தவன் ! என்று ,

    गीत: ........... கீதையில் , புகழப் பட்டுள்ளான் !

    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��


    * விளக்கொளி எம்பெருமானே !


    * உலகில் , ஸகல பகுதிகளிலும் , உட்புகுந்து , அவற்றைத் , தாங்கி நிற்கிறாய் !


    * உன் ஸங்கல்பத்தாலேயே , எல்லா வஸ்துக்களையும் , ஆள்கிறாய் !


    * உலகில் பயனைத் , தன் பயனாகக் கொண்டு , சேஷி , ஆகிறாய் !


    * ஆதலின் , ஸகல வஸ்துக்களையும் , சரீரமாகக் கொண்டு , நீ ஆத்மாவாய் , விளங்குகிறாய் !


    * பெரிய பிராட்டியைக் , கணமும் பிரியாது , நிற்கிறாய் !


    * ஜகத்துக்கு , ஆதி காரணமாய் இருக்கிறாய் !


    * இந்த அடையாளங்களுடன் , இன்னும் பலவற்றைக் , கொண்டு , உன்னைப் புருஷோத்தமன் என்று , ஒருவன் உணர்ந்துகொண்டால் போதும் .


    * அவனை , உலகில் , அவசியம் அறிய வேண்டிய , அனைத்தையும் , உணர்ந்தவனாக ; கீதையில் , புகழ்ந்து , கூறியுள்ளாய் !








    ��

    Last edited by sridharv1946; 08-10-18, 09:48.
Working...
X