श्री शरणागति दीपिका : 03 / 59
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
எம்பெருமானே ! நீ விளக்கு ! உன் தேவி , அதன் ஒளி ! உங்களைத் துதிக்க , அருள் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
दीप: - त्वम् , एव , जगताम् ; दयिता , रुचि: , ते ;
दीर्घम् , तम: , प्रतिनिवर्त्यम् - इदम् , युवाभ्याम् ; |
स्तव्यम् ; स्तव , प्रियम् ; अत: , शरण - उक्ति , वश्यम् ;
स्तोतुम् , भवन्तम् , अभिलष्यति ! जन्तु: - एक: ॥
தீப: - த்வம் , ஏவ , ஜகதாம் ; தயிதா , ருசி: , தே ;
தீர்க்கம் , தம: , ப்ரதிநிவர்த்யம் - இதம் , யுவாப்யாம் ; |
ஸ்தவ்யம் ; ஸ்தவ , ப்ரியம் ; அத: , ஶரண - உக்தி , வஶ்யம் ;
ஸ்தோதும் , பவந்தம் , அபிலஷ்யதி ! ஜந்து: - ஏக: ||
जगताम् .......... உலகங்களுக்கு ,
दीप: .............. விளக்கு ,
त्वम् एव .......... நீயே !
रुचि: ............. அதன் ஒளி ,
ते .................. உன்னுடைய ,
दयिता ............ தேவியே !
दीर्घम् ............. நெடுங்காலமாக உள்ள ,
इदम् .............. இந்த ,
तम: ............... (அஞ்ஞான) இருள் ,
युवाभ्याम् ......... உங்கள் இருவர்களாலேயே ,
प्रतिनिवर्त्यम् ...... நீக்க முடியும் !
अत: .............. ஆகையால் ,
एष ................ இந்தப்,
जन्तु : ............. பிராணி ;
स्तव्यम् ............ துதிக்க ஏற்றவனும் ,
स्तव ............... ஸ்தோத்ரத்தால் ,
प्रियम् ............. மகிழ்ச்சி கொள்பவனும் ,
शरण .............. அடைக்கலம் ,
उक्ति .............. என்ற சொல்லுக்கு ,
वश्यम् ............. வசப்பட்டவனுமான ;
भवन्तम् ............ உன்னைத் ,
स्तोतुम् ............ துதிக்க ,
अभिलष्यति ...... விரும்புகிறது !
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* விளக்கொளி எம்பெருமானே !
* உலகங்கள் அனைத்துக்கும் , ஒளியைத் தரும் தீபமாக உள்ளவன் நீ ஒருவனே .
* ஒளியை உடைய , மற்ற பொருட்களுக்கு எல்லாம் , நீயே ஒளியைத் தருகிறாய் .
* உன்னைக் , கணமும் பிரியாது , நிற்கும் , பெரியபிராட்டி , தீபமாய் நிற்கும் , உனக்கு , ஒளியாகத் திகழ்கிறாள் .
* உலகம் , நெடுங்காலமாக , அஞ்ஞானம் என்னும் இருளில் , மூழ்கிக் கிடக்கிறது . இந்த இருளை போக்க , உங்கள் ஒருவரால் மட்டுமே , முடியும் .
* பிறர் , துதிப்பதற்கு , ஏற்ற பெருமையும் , தகுதியும் உனக்கே உள்ளன .
* உன் குணங்களைப் புகழ்ந்தால் , உனக்கு , மிக்க மகிழ்ச்சி உண்டாகி , அருள் புரிவாய் .
* 'உனக்கே அடைக்கலம்' என்று வாயினால் கூறினால் , நீ வசப்பட்டு விடுகிறாய் .
* இத்தகைய , பெருமை உடைய , இந்த ஜந்து , துதிக்க விரும்புகிறது .
* இதற்கு வேண்டிய அறிவை , நீயே , அருள வேண்டும் !