श्री शरणागति दीपिका : 02 / 59
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
விளக்கொளி எம்பெருமான் , ஒப்பற்ற பரதேவதையாக , விளங்குகிறான் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
नित्यम् , श्रिया , वसुधया , च , निषेव्यमाणम् ;
निर्व्याज , निर्भर , दया , भरितम् ; विभाति ! |
वेदान्त , वेद्यम् ; इह ; वेगवती , समीपे ;
दीप , प्रकाश , इति , दैवतम् ; अद्वितीयम् ॥
நித்யம் , ஶ்ரியா , வஸுதயா , ச , நிஷேவ்யமாணம் ;
நிர்வ்யாஜ , நிர்ப்பர , தயா , பரிதம் ; விபாதி ! |
வேதாந்த , வேத்யம் ; இஹ ; வேகவதீ , ஸமீபே ;
தீப ப்ரகாஶ , இதி , தைவதம் ; அத்விதீயம் ||
श्रिया ............. பெரிய பிராட்டியாலும் ,
वसुधया च ....... பூமிப் பிராட்டியாலும் ,
नित्यम् ........... எப்பொழுதும் ,
निषेव्यमाणम् .... பணிவிடை செய்யப்படுபவரும் ;
निर्व्याज .......... காரணம் இன்றி ,
निर्भर ............. பரிபூர்ணமான ,
दया .............. கருணை ,
भरितम् ........... நிறைந்தவரும் ;
वेदान्त ........... வேதாந்தங்களால் ,
वेद्यम् ............ அறிய உரியவராகவும் உள்ள ;
दीप प्रकाश ..... "விளக்கொளிப் பெருமாள்"
इति .............. என்ற ,
अद्वितीयम् ....... ஒப்பற்ற ,
दैवतम् ........... பரதேவதை ;
इह ............... இங்கு ,
वेगवती .......... வேகவதி ,
समीपे ........... அருகில் ;
विभाति .......... விளங்குகிறது !
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* விளக்கொளி எம்பெருமான் , தேஜோமயமான திருமேனியுடன் , வேகவதி நதிக்கு அருகில் , திருத்தண்கா என்னும் திவ்ய தேசத்தில் , எழுந்தருளி உள்ளான் .
* பெரிய பிராட்டியும் , பூமிப் பிராட்டியும் , எப்பொழுதும் , அவனுக்குத் தொண்டு புரிகின்றனர் .
* அவனுடைய கருணை , சேதநர் பால் , இயற்கையாய் , நிறைந்து நிற்கிறது .
* வேதங்கள் எல்லாம் , அவனது பெருமையைச் , சிறிதாவது , அறிய முயன்று , அவனையே பேசுகின்றன .
* இப்படி அந்த எம்பெருமான் , ஒப்பற்ற பரதேவதையை விளங்குகிறான் !