श्री शरणागति दीपिका : 01 / 59
ஸ்ரீ ஶரணாகதி தீபிகா
மடைப்பள்ளி ஸம்ப்ரதாயமே , இந்த ஸ்தோத்ரம் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
i
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் முன்னுரை :
* சரணாகதி என்னும் , பிரபத்தியைப் பற்றிய , அம்சங்களை நன்கு வெளியிடும் தீபமாக இருப்பது பற்றி இதற்கு இப்பெயர் வந்தது . இந்த திருநாமமும் ஸ்ரீ தேசிகன் தானே விட்டது .
* இது 59 சுலோகங்கள் கொண்டது .
* இந்த ஸ்தோத்திரம் , ஸ்ரீ தேசிகன் திரு அவதரித்த தலம் ஆகிய , திருத்தண்காவில் , கோவில் கொண்டு , எழுந்தருளியிருக்கும் , எம்பெருமானுக்கு விளக்கொளி எம்பெருமானைப் பற்றியதாகும் .
* வடமொழியில் 'தீபப் பிரகாசர்' என்று நாமும் வழங்கும் .
* இத்தலத்திற்கு அருகில் , வேகவதி என்னும் ஆறு ஓடுகிறது .
* இத்தலத்தில் , 'லட்சுமி ஸரஸ் ' எனும் பொய்கை உள்ளது . இப் பொய்கையிலிருந்து , பெரியபிராட்டி தோன்றி , விளக்கொளி எம்பெருமானை , அடைந்ததாக புராணம் கூறும் .
* இந்த ஸ்தோத்திரம் , ஸ்ரீபாஷ்யகாரருடைய அந்தரங்க கைங்கர்ய பரராய் , இருந்து , அவரிடமிருந்து , ஸர்வ அர்த்தங்களையும் பெற்ற , மடப்பள்ளி ஆச்சான் ஸம்பிரதாயமே , இந்நூல் அவதரித்ததாக , பேசிக்கொண்டே தொடங்குகிறது .
* இதில் :
. பிராட்டியின் அவதாரம்
. எம்பெருமானுக்கு , எல்லோரிடமிருந்து ,மேம்பாடு .
. அவனுடைய , ஆறு குணங்களின் , முக்கியத்தன்மை .
. ஆசாரிய பரம்பரையில் , அவனது முதன்மை .
. அவனே ஸர்வ வித பந்துவாக நிற்றல் .
. அவனுடைய அவதார ரகசியம் .
. ஸௌசீல்ய குணம் .
. பக்தி யோக முறை .
. ப்ரபத்தியின் பெருமை .
. அதன் ஐந்து அங்கங்கள் .
. உத்தர கைங்கரியம் .
. இருவகை ஆராதனை முறை .
. பாகவத கைங்கர்யம் .
. சரீரத்திலிருந்து , ஜீவன் வெளியேறும் முறை .
. அர்ச்சிராதி மார்க்கம் .
. முத்தியில் எம்பெருமானுக்கு சமமாதல் .
. இம்மைப் போகத்தில், உள்ள ஏழு வகை குற்றங்கள் .
. முதலிய அவசியமான பல விஷயங்களை விளக்குகிறார்
* மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை , அருளுமாறு , எம்பெருமானை பிரார்த்திக்கிறார் .
* இந்நூல் , உலகில் உள்ள , அஞ்ஞான இருள் எல்லாம் , ஒழிக்க வல்லது , எனக்கூறி , தலைக் கட்டுகிறார் நம் , ஆச்சாரிய ஸார்வபௌமன்
पद्मा , पते: , स्तुति , पदेन , विपच्यमानम् ,
पश्यन्तु - इह , प्रपदन , प्रवणा , महान्त: ।
मत् - बाक्य , संवलितम् - अपि - अजहत् , स्वभावम् ,
मान्यम् , यति - ईश्वर , महानस , संप्रदायम् ॥
பத்மா , பதே: , ஸ்துதி , பதேந , விபச்யமாநம் ,
பஶ்யந்து ! இஹ , ப்ரபதந , ப்ரவணா , மஹாந்த: |
மத் - வாக்ய , ஸம்வாலிதம் - அபி - அஜஹத் , ஸ்வபாவம் ,
மாந்யம் , யதி - ஈஶ்வர , மஹாநஸ , ஸம்ப்ரதாயம் ||
प्रपदन ........... சரணாகதியில் ,
प्रवणा ........... ஈடுபட்டவர்களான ,
महान्त: .......... பெரியோர்கள் ,
पद्मा ............. பிராட்டிக்கு ,
पते: .............. நாயகனான , எம்பெருமானுடைய ;
स्तुति पदेन ...... இந்த ஸ்தோத்ரமாக ,
विपच्यमानम् .... வடிவு கொண்ட ,
मत् ............... என்னுடைய ,
वाक्य ............ வாக்யங்களோடு ;
संवलितम् ....... கலந்திருந்த ,
अपि ............. போதிலும் ;
स्वभावम् ........ தன் பெருமையை ,
अजहत् .......... கை விடாமல் ;
मान्यम् ........... மதிப்புக்கு உரியவரான ,
यति ईश्वर ..... ஶ்ரீ பாஷ்யகாரருடைய ,
महानस .......... திரு மடைப்பள்ளி வழியாய் வந்த ,
संप्रदायम् ........ ஸம்ப்ரதாயத்தை ,
इह ............... இந்த நூலில்
पश्यन्तु .......... உற்று நோக்கட்டும் !
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* ஸ்ரீபாஷ்யகாரரிடத்தில் , திருமறைப்பள்ளி கைங்கரியம் செய்து கொண்டே , அவரிடம் , ஸகலமான அர்த்தங்களையும் , கேட்டு , விஷய ஞானம் பெற்றவர் , மடைப்பள்ளி ஆச்சான் என்னும் ஆச்சாரியர் .
* ஆசார்ய பரம்பரையில் , இவர் ஸ்ரீபாஷ்யகாரருக்கு , அடுத்த ஆச்சாரியார் .
* இவருக்குப் , ப்ரணதார்த்திஹரர் எனும் திருநாமம் உண்டு
* இவருக்குப் பிறகு , கடாம்பி ராமானுஜாச்சாரியார் , கடாம்பி , ரங்கராஜாசாரியார் , கடாம்பி அப்புள்ளார் ...இப்படி ஆசார்ய பரம்பரை வருகிறது .
* ஆகவே , மடைப்பள்ளி ஆச்சான் , வழியாய் வருவது பற்றி , இந்த ஸம்பிரதாயமே , மடைப்பள்ளி ஸம்பிரதாயம் என்று , கூறப்படுகிறது .
இந்த ஸம்பரதாயத்தில் , சரணாகதியே , மோக்ஷத்திற்குச் , சிறந்த உபாயமாக , கொள்ளப் பட்டு , பஎல்லா ஆச்சார்யர்களாலும் , அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது .
* இந்த ஸம்ப்ரதாயத்தின் , முக்கியமான அம்சங்கள் எல்லாம் , இந்த ஸ்தோத்திரத்தில் அமைந்திருப்பதால் , மடைப்பள்ளி ஸம்பரதாயமே , இந்த நூலாக வடிவம் கொண்டது என்று கூறுதல் பொருந்தும் .
* இந்நூல் சிறியனான , அடியேனுடைய வாக்கியங்களைக் , கலந்து இயற்றப் பெற்றிருப்பினும் , மடைப்பள்ளி ஸம்பிரதாயத்தையே , இந்நூல் அடக்கிக் கொண்டிருப்பதால் , சிறிதும் பெருமை குறையவில்லை .
* இவ்வுலகில் , ப்ரபத்தியில் , மிக்க நம்பிக்கையோடு , ஈடுபட்டுள்ள பெரியவர்கள் , இந்த ஸ்தோத்ரத்தின் வாயிலாக வெளியாகும் , உயர்ந்த மடைப்பள்ளி ஸம்பிரதாயத்தின் , ஸாரமான , சரணாகதி முறையைக் கண்டு மகிழ்வார்களாக !