श्री हयग्रीव स्तोत्रम् 31 / 33
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
ஹயக்ரீவனே ! உன் அருளால் , என் உள்ளம் , தெளிவாகும் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
अकम्पनीयानि - अपनीति , भेदै: ,
अलंकृषीरन् ! हृदयम् , मदीयम् |
शंका , कलंक - अपगम - उज्जवलानि ,
तत्त्वानि ; सम्यंचि , तव , प्रसादात् ॥
அகம்பநீயாநி - அபநீதி , பேதை: ,
அலங்க்ருஷீரந் ! ஹ்ருதயம் , மதீயம் |
ஶங்கா , களங்க - அபகம - உஜ்ஜ்வலாநி ,
தத்த்வாநி ; ஸம்யஞ்சி , தவ , ப்ரஸாதாத் ||
अपनीति भेदै: ...... பற்பல , குயுக்திகளால் ,
अकम्पनीयानि ..... அசைக்க முடியாததும் ;
शंका ................ ஸந்தேஹம் எனும் ,
कलंक .............. அழுக்கு ,
अपगम ............. கழிந்ததால் ;
उज्जवलानि ........ நன்கு புலப்படுவதும் ஆன ;
सम्यंचि ............. சிறந்த ,
तत्त्वानि ............. உண்மைக் கருத்துகள் ;
तव .................. உன்னுடைய ,
प्रसादात् ............ திருவருளால் ;
मदीयम् ............. எனது ,
हृदयम् .............. உள்ளத்தை ;
अलंकृषीरन् ........ சிறப்பாக ஆக்க வேண்டும் !
ஶ்ரீ உப. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !
* அடியேன் , உன் திருவருள் பெற்றால் , உள்ளத்தில் உள்ள ஐயங்கள் எனும் , அழுக்குகள் , ஒழிந்து போகும் .
* அதனால் , ஸித்தாந்தத்தின் , உண்மைப் பொருள்கள் எல்லாம் , எனது உள்ளத்தில் , எழில் மிகுந்து , விளங்கும் .
* பிற மதத்தினர் , எத்தனை குயுக்திகளை , பல்வேறு வகையில் , வெளியிட்டாலும் , அவற்றால் , அடியேனது உள்ளத்தில் , நிலைபெற்றுள்ள , உண்மைக் கருத்துகளை , அசைக்கமுடியாது .
* ஆதலின் , அடியேனுக்கு , அருள் புரிய வேண்டும் !