श्री हयग्रीव स्तोत्रम् 30 / 33
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
ஹயக்ரீவனே ! அடியேன் மீது , அருளி , உய்விக்க வேண்டும் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
नानाविधानाम् - अगति: , कलानाम् ;
न , च - अपि , तीर्थेषु , कृत - अवतार: ।
ध्रुवम् ! तव - अनाथ , परिग्रहाया: ,
नवम् , नवम् , पात्रम् - अहम् , दयाया: ॥
நாநாவிதாநாம் - அகதி : , கலாநாம் ;
ந , ச - அபி , தீர்த்தேஷு , க்ருத - அவதார: |
த்ருவம் ! தவ - அநாத , பரிக்ரஹாயா: ,
நவம் , நவம் , பாத்ரம் - அஹம் , தயாயா: ||
अहम् .............. அடியேன் ,
नानाविधानाम् .... பல் வகையான ,
कलानाम् ......... கலைகளுக்கு ;
अगति: ............ உறைவிடம் இல்லை !
तीर्थेषु च .......... புண்ய தீர்த்தங்களில் (ஆசார்யர்களிடம்)
अवतार: अपि .... நீராடுவதை ( நல்ல பயிற்சி பெறுவதை )
न कृत : ........... செய்தவனும் இல்லை !
अनाथ ............. அகதிகளையே ,
परिग्रहाया: ....... ஏற்றுக் கொள்ளும் ,
तव ................ உனது ,
दयाया: ........... கருணைக்கு ,
नवम् नवम् ........ மிகப் புதிய ;
पात्रम् ............. பாத்திரமாக உள்ளேன் !
ध्रुवम् .............. நிச்சயம் !
ஶ்ரீ உப.வே.வ.ந. ஶ்ரீராமதேசிகாசர்யரின் விளக்கவுரை :
* ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !
* உலகில் நடமாடும் , பல்வேறு கலைகள் எதையும் , அடியேன் , நன்கு கற்றவன் , அல்லேன் .
* புனிதமான தீர்த்தங்களில் நீராடி , புண்ணியத்தை சம்பாதித்தவனும் , அல்லேன் .
* ஆச்சாரியர்களை , நன்கு வழிபட்டு , பயிற்சி பெற்றவனும் , அல்லேன் .
* உனது திருவருளோ (அடியேனை போன்ற ) அகதிகளை ஏற்றுக் கொண்டு உய்விப்பதாய் உள்ளது .
* இந்த திருவருளைப் பெற , அடியேன் முற்றும் தகுதி உடையவராய் உள்ளேன் . அடியேனை போன்ற பாத்திரம் கிடைப்பது அரிது .
* அடியேன் மீது , இரங்கி , அருள வேண்டும்.