श्री हयग्रीव स्तोत्रम् 25 / 33
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
ஹயக்ரீவனே ! உன் இடது திருக்கையை , இடைவிடாது , தியானிக்கிறேன் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
प्रबोध , सिन्धो: - अरुणै: , प्रकाशै: ,
प्रवाल , संघातम् - इव - उद्वहन्तम् ।
विभावये ! देव ! सपुस्तकम् , ते ;
वामम् , करम् ; दक्षिणम् - आश्रितानाम् ॥
ப்ரபோத , ஸிந்தோ: - அருணை : , ப்ரகாஶை: ,
ப்ரவாள , ஸங்காதம் - இவ - உத்வஹந்தம் |
விபாவயே ! தேவ ! ஸபுஸ்தகம் , தே ;
வாமம் , கரம் ; தக்*ஷிணம் - ஆஶ்ரிதாநாம் ||
देव ............... பெருமானே !
अरुणै: ........... செந் நிறமான ,
प्रकाशै: .......... ஒளிகளால் ;
प्रबोध ............ ஞானக் ,
सिन्धो: ........... கடலில் இருந்து ;
प्रवाल ............ பவழங்களின் ,
संघातम् .......... தொகுதியை ;
उद्वहन्तम् ......... எடுத்துக் கொண்டு இருப்பது ,
इव ................ போன்றதும் ;
आश्रितानाम् .... அடியார்களின் விஷயத்தில் ,
दक्षिणम् .......... வல்லமை உடையதும் ;
सपुस्तकम् ........ புத்தகத்தை உடையதும் ஆன ;
ते .................. உனது ,
वामम् ............. இடது ,
करम् .............. திருக்கையை ;
विभावये .......... தியானிக்கிறேன் !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :
* ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !
* உன் இடத் திருக் கைகள் , இரண்டனுள் ஒன்றில் , புத்தகத்தைத் , தாங்கியுள்ளாய் .
* திருக்கையின் , செம்மை நிறமான ஒளி , சுற்றிலும் பரவி உள்ளது . இதைக் காணும் கால் ,
ஞானமாகிய , கடலில் இருந்து எடுத்த , பவழங்களின் தொகுதி போல் , தோன்றுகிறது .
* அடியார்களுக்கு , வேண்டிய பலனைத் தர வல்ல , இத் திருக்கையை , இடைவிடாது , சிந்திக்கிறேன் !
[ தக்*ஷிண - வலம் ; வாம - இடம் ; திருக்கை , தக்*ஷிணமாயும் , வாமமாயும் , இருப்பது என்பது முரண்பாடு . 'தக்*ஷிண' என்ற சொல்லுக்கு , 'வல்ல' என்ற பொருளைக் கொண்டால் , முரண்பாடு , நீங்கும். இது ஒரு கவி நயம் ]