श्री हयग्रीव स्तोत्रम् 20 / 33
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
ஹயக்ரீவனே ! உன் திருவடித் துகள்கள் , அடியேன் முடியில் படிந்து , அருள வேண்டும் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
विलुप्त , मूर्धण्य , लिपि , क्रमाणाम् ;
सुरेन्द्र , चूडा , पद , लालितानाम् |
त्वत् - अंघ्रि , राजीव , रज: , कणानाम् ;
भूयान् , प्रसादो , मयि ; नाथ ! भूयात् ! ॥
விலுப்த , மூர்த்தண்ய , லிபி , க்ரமாணாம் ;
ஸுரேந்த்ர , சூடா , பத , லாலிதாநாம் |
த்வத் - அங்க்ரி , ராஜீவ , ரஜ: , கணாநாம் ;
பூயாந் , ப்ரஸாதோ , மயி ; நாத ! பூயாத் ! ||
नाथ ............. ஸ்வாமி !
मूर्धण्य .......... தலை ,
लिपि ............ எழுத்து ,
क्रमाणाम् ....... வரிசைகளை ,
विलुप्त .......... அழிக்க வல்லதும் ;
सुरेन्द्र ............ பிரமன் முதலியோரின் ,
चूडा पद ......... முடியினால் ,
लालितानाम् .... கொண்டாடப்படுவதுமான ;
त्वत् .............. உன் ,
अंघ्रि ............. திருவடித் ,
राजीव ........... தாமரைகளின் ,
रज: ............. துகள்களின் ,
कणानाम् ....... அணுக்களின் ;
भूयान् .......... மிகுதியான ,
प्रसादो .......... திருவருள் ;
मयि ............. என்னிடம் ,
भूयात् ........... சேரவேண்டும் !
ஶ்ரீ உப.வே.ஶ்ரீராமதேசிகாசாரியாரின் விளக்கவுரை :
* ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !
* ஒவ்வொருவருடைய தலையிலும், அவனது வாழ்க்கை முறையைப் பற்றி , பிரமன் எழுதி விடுகிறான் . இவ்வெழுத்தே , தலை எழுத்து , என வழங்கப்படும் . அதைத் , தழுவியே அவரது வாழ்க்கை நடைபெறும் .
* அவ்வெழுத்தையும் அழித்து , நன்மையையே விளைவிக்க வல்லன , உன் திருவடித் தாமரைகளின் துகள்கள் . பிரமன் முதலிய , தேவர்களும் , உன் திருவடிப் புழுதியைத் , தன் முடியில் , தாங்கிப் , போற்றுகின்றனர் .
* இத்தனை பெருமை பெற்ற , உன் திருவடித் துகள்களின் , அணுக்கள் , அடியேனுடைய முடியிலும் , படிந்து , நின்று , மிகுதியான திருவருளை , என் பால் சுரக்க வேண்டும் !