Announcement

Collapse
No announcement yet.

स्तोत्रम् 18 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் 🙏 ஹ&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • स्तोत्रम् 18 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் 🙏 ஹ&#

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 18 / 33


    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்













    ��


    ஹயக்ரீவனே ! ஞானிகள் , உன் அருளால் , உன் , மாயையைக் ; கடக்கின்றனர் !








    ��








    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��



    ��


    स्वैर - अनुभावा: ; त्वत् - अधीन ,भावा: ;

    समृद्ध , वीर्या: ; त्वत् - अनुगरहेण ।

    विपश्चितो ; नाथ ! तरन्ति ! मायाम् ;

    वैहारिकीम् ; मोहन , पिंचिकाम् ; ते ॥



    ��


    ஸ்வைர - அநுபாவா: ; த்வத் - அதீந , பாவா: ;

    ஸம்ருத்த , வீர்யா: ; த்வத் - அநுக்ரஹேண |

    விபஶ்சிதோ ; நாத ! தரந்தி ! மாயாம் ;

    வைஹாரிகீம் ; மோஹந , பிஞ்சிகாம் ; தே ||



    ��



    नाथ ........... ஸ்வாமி !

    स्वैर ........... தடை அற்ற ,

    अनुभावा: ..... பெருமை உடையவர்களும் ;

    भावा: ......... (தம்) உள்ளத்தை ,

    त्वत् ........... உன் ,

    अधीन ........ வசம் ஆக்கியவர்களும் ஆன ;

    विपश्चित: ... ஞானிகள் ;

    समृद्ध ......... வளர்ந்த ,

    वीर्या: ......... மன வலிமை , பெற்று ;

    वैहारिकीम् ... உன் லீலைக்குச் சாதனமாயும் ;

    मोहन .......... மயக்குகிறதாயும் ,

    पिंचिकाम् .... மயில் தோகை போன்றதாயும் உள்ள ,

    ते .............. உன் ,

    मायाम् ........ ப்ரக்ருதியை ,

    त्वत् ........... உன் ,

    अनुग्रहेण ..... திருவருளால் ,

    तरन्ति ......... கடக்கின்றனர் !



    ��



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :


    ��




    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !


    ��

    * உலகில் , ஜால வித்தைக் காரர்கள் , மயில் தோகையை வைத்துக்கொண்டு , சபையோரை மயங்கச் செய்வர் .

    * அவ்வாறே , நீ , பிரகிருதி என்னும் , மாயையைக் கொண்டு , சேதனர்களை , அதில் மயங்கி , ஈடுபடச் செய்து , திருவிளையாடல்களைப் , புரிகிறாய் .

    * ஆனால் , சிறந்த ஞானிகள் , அந்த மாயையில் , மயங்குவதில்லை . அவர்களின் பெருமையை , யாரும் குறைக்க முடியாது . அவர்கள் , உன்னிடமே , தங்கள் மனத்தை , ஈடுபடுகின்றனர் .

    * அதனால் , அவர்களின் மன உறுதி , மேன்மேலும் வளர்ந்து போகிறது . அவர்கள் பால் , உன் திருவருள் சுரக்கிறது . ஆதலின் , மாயைக்கு , அவர்கள் , அகப்படாது , அதைக் கடந்து விடுகின்றனர் .

    * இதற்கு , உன் பெருமையன்றோ , காரணம் ?




    ��











Working...
X