श्री हयग्रीव स्तोत्रम् 12 / 33
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
கலைக்கடவுளே ! "நீ படைத்த யாவற்றிற்கும் , நீயே , கடைசி எல்லை "என்கிறது , வேதங்கள் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
अव्याकृतात् , व्याकृतवान् , असि ; त्वम् !
नामानि , रूपाणि , च , यानि , पूर्वम् ।
शंसन्ति ! तेषाम् ; चरमाम् , प्रतिष्ठाम् ;
वाक् - ईश्वर ! त्वाम् ; त्वत् , उपझ , वाच: ॥
அவ்யாக்ருதாத் , வ்யாக்ருதவாந் , அஸி ; த்வம் !
நாமாநி , ரூபாணி , ச , யாநி , பூர்வம் |
ஶம்ஸந்தி ! தேஷாம் ; சரமாம் , ப்ரதிஷ்ட்டாம் ;
வாக் - ஈஶ்வர ! த்வாம் ; த்வத் , உபஜ்ஞ , வாச: ||
वाक् ईश्वर .... கலைக் கடவுளே !
पूर्वम् ............ முதலில் ,
अव्याकृतात् ... மூல ப்ரக்ருதியிலிருந்து ,
यानि ............ எந்தப் ,
नामानि ......... பெயர்களையும் ,
रूपाणि च ...... உருவங்களையும் ;
व्याकृतवान् ..... படைத்தவனாக ,
त्वम् ............. நீ ,
असि ............ ஆகிறாயோ ;
तेषाम् ........... அவற்றின் ,
चरमाम् ......... கடைசியான ,
प्रतिष्ठाम् ....... சேரும் இடமாகவும் ,
त्वाम् ........... உன்னை ;
त्वत् उपझ ...... நீ கண்டு , வெளியிட்ட ,
वाच: ............ வேதங்கள் ,
शंसन्ति ......... புகழ்கின்றன !
ஶ்ரீ உப.வே.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* கலைகளுக்குத் , தெய்வமாகிய , ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !
* இந்தப் பிரபஞ்சம் , படைப்புக்கு முன் , பெயரும் , உருவமும் , இல்லாமல் , இருந்தது . அந்த நிலையில் , அது , "அவ்யாக்ருதம்" என்று அழைக்கப்பட்டது . அதிலிருந்து மஹாந் , அகங்காரம், பஞ்சபூதங்கள் , முதலியவற்றை , நீ படைத்து , அவற்றுக்கு , பெயரையும் , உருவத்தையும் படைத்தாய் .
* அப்பொருள்கள் அனைத்தையும் , சரீரமாகக் கொண்டு , அவற்றுக்கு , அந்தர்யாமியாகவும் , இருக்கிறாய் . ஆதலின் , அவற்றைச் சொல்லும் சொற்கள் , அவற்றிற்கு அந்தர்யாமியான ,உன்னையே சொல்லி , முடிவு பெறுவதாலும் , அவ்வுருவங்களுக்கு , நீயே , முடிவான ஆதாரமாய் இருப்பதாலும் , நீதான் கடைசி எல்லை ஆகிறாய் .
* இக்கருத்தை , நீ , முதலில் கண்ட வேதங்கள் , புகழ்கின்றன !