श्री हयग्रीव स्तोत्रम् 10 / 33
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
ஹயக்ரீவனே ! எல்லா ஹவிஸ்ஸுகளையும் , நீயே , பெற்று , பின் , தேவர்களுக்கு அளிக்கிறாய் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
अग्नौ , समिद्ध - अर्चिषि , सप्त , तन्तो: , ;
आतस्थिवान् ; मन्त्र , मयम् , शरीरम् ।
अखण्ड , सारै: , हविषाम् , प्रदानै: ;
आप्यायनम् , व्योम , सदाम् , विधत्से ! ॥
அக்நௌ , ஸமித்த - அர்ச்சிஷி , ஸப்த , தந்தோ: ;
ஆதஸ்த்திவாந் ; மந்த்ர , மயம் , சரீரம் |
அகண்ட , ஸாரை: , ஹவிஷாம் , ப்ரதாநை: ;
ஆப்யாயநம் , வ்யோம , ஸதாம் , விதத்ஸே ! ||
समिद्ध ......... கொழுந்து விட்டு ,
अर्चिषि ......... எரிகிற ,
सप्त तन्तो: ..... வேள்வியின்,
अग्नौ ........... அக்நியில் ,
मन्त्र मयम् ...... மந்த்ரங்கள் ஆகிய ,
शरीरम् ......... திருமேனியைக் ,
आतस्थिवान् ... கொண்டு நின்று ;
अखण्ड ......... முழுதும் ,
सारै: ............ சுவை நிறைந்த ,
हविषाम् ........ ஹவிஸ்ஸுகளின் ,
प्रदानै: ........... கொடைகளால் ;
व्योम ............ வானத்தில் , உறையும் ,
सदाम् ........... தேவர்களுக்கு ,
आप्यायनम् .... திருப்தியை ,
विधत्से .......... விளைவிக்கிறாய் !
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* ஶ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !
* உலகில் , மானிடர்கள் , வேள்விகளைச் செய்யும்போது , சுடர் , கொழுந்துவிட்டு எரியும் , அக்நியில் , ஹவிஸ்ஸுகளை , ஹோமம் செய்கின்றனர் .
* அப்பொழுது , அவர்கள் உச்சரிக்கும் , மந்திரங்களின் வடிவத்தில் , நீயே இருந்து , அந்த ஹவிஸ்ஸுகளைப் , பெறுகிறாய் .
* பின் , நிறைந்த சுவையுள்ள, அந்த ஹவிஸ்ஸுகளை , அந்த அந்த தேவர்களுக்கு , நீயே கொடுத்தருளி , அவர்கள் , பரிபூரண திருப்தி , பெறும்படி செய்து வருகிறாய் !