श्री हयग्रीव स्तोत्रम् 08 / 33
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
ஶ்ரீ கலா நிதியே ! பிரமனுக்கு , மீண்டும் , உபதேசித்து , காத்தது , நீயே !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
मन्द : - अभविष्यत् ! नियतम् , विरिंचो ;
वाचाम् , निधे ! वंचित , भागधेय: ।
दैत्य - अपनीतान् ; दयया - एव ; भूय: - अपि ,
अध्यापयिष्यो , निगमान् , न , चेत् , त्वम् ॥
மந்த: - அபவிஷ்யத் ! நியதம் , விரிஞ்சோ ;
வாசாம் , நிதே ! வஞ்சித , பாகதேய: |
தைத்ய - அபநீதாந் ; தயயா - ஏவ ; பூய: - அபி ;
அத்யாபயிஷ்யோ , நிகமாந் , ந , சேத் , த்வம் ||
वाचाम् ................. கலைகளுக்கு ,
निधे ..................... உறைவிடம் ஆனவனே !
त्वम् ..................... நீ ;
दैत्य ..................... அசுரர்களால் ,
अपनीतान् .............. கவரப்பட்ட ,
निगमान् ................. வேதங்களை ;
दयया एव ............... கருணையாலேயே ;
भूय: अपि ............... மறுபடியும் (பிரமனுக்கு)
न अध्यापयिष्य : चेत् .. உபதேசித்து இருக்கா விட்டால் ;
विरिंच : ................. பிரம தேவன் ,
भागधेय: ................ பாக்யத்தை ,
वंचित ................... இழந்து ;
नियतम् ................. நிச்சயமாக ,
मन्द : ................... மூடனாக ,
अभविष्यत् ............. ஆகியிருப்பான் !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* கலைகளுக்கு உறைவிடமான , ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !
* நீ , முதலில் , பிரம்மனுக்கு , வேதங்களை உபதேசித்து , அருளினாய் . மது கைடபர்கள் என்னும் , இரண்டு அசுரர்கள் , தம் வலிமையால் , பிரம்மனிடம் இருந்து , அவ்வேதங்களைக் , கவர்ந்து சென்று விட்டனர் .
* அதனால் , பிரம்மன் , செய்வது அறியாது , திகைத்து நிற்கும்போது , நீ அவன்பால் கருணை கொண்டு , மறுபடி , வேதங்களை , அவனுக்கு , உபதேசித்துக் , காத்து அருளினாய் . நீ , அவ்வாறு செய்திராவிடில் , பிரமனது கதி , யாதாக இருந்திருக்கும் ?
* வேதங்களை இழந்ததால் , படைத்தல் முதலிய , எச்செயலையும் செய்ய முடியாது , திகைத்து நின்றிருப்பான் !