श्री हयग्रीव स्तोत्रम् 05 / 33
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
ஸ்ரீ ஹயக்ரீவனை , அடியேன் ,சரணம் அடைகிறேன் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
विशुद्ध , विझान , घन , स्वरूपम् ;
विझान , विश्राणन , बद्ध , दीक्षम् |
दया , निधिम् ; देह , भृताम् , शरण्यम् ;
देवम् ; हयग्रीवम् ; अहम् , प्रपद्ये ! ॥
விஶுத்த , விஜ்ஞாந , கந , ஸ்வரூபம் ;
விஜ்ஞாந , விஶ்ராணந , பத்த , தீக்ஷம் |
தயா , நிதிம் ; தேஹ , ப்ருதாம் , ஶரண்யம் ;
தேவம் ; ஹயக்ரீவம் ; அஹம் , ப்ரபத்யே ! ||
विशुद्ध ....... மிகத் தூய்மையான ,
घन ........... முழுவதும் ,
विझान ....... ஞான மயமான ,
स्वरूपम् ..... ஸ்வரூபத்தை , உடையவனும் ;
विझान ...... விசேஷமான ஞானத்தை ,
विश्राणन .... அருள்வதில் ,
बद्ध दीक्षम् .. விரதம் பூண்டவனும் ;
दया .......... கருணைக்கு ,
निधिम् ....... உறைவிடம் ஆனவனும் ;
देह भृताम् ... பிராணிகளுக்கு ,
शरण्यम् ..... அடைக்கலம் ஆனவனும் ஆன ;
हयग्रीवम् .... ஹயக்ரீவப் ,
देवम् ......... பெருமானை ,
अहम् ........ அடியேன் ,
प्रपद्ये ......... சரணம் அடைகிறேன் !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* ஸ்ரீ ஹயக்ரீவனுடைய , திவ்ய , ஆத்ம , ஸ்வரூபம் ( ஆத்மா ) , முழுவதும் பரிசுத்தமான , ஞான வடிவமாகவே , உள்ளது .
* இவன் , கருணைக் கடலாய் இருப்பதால் , சேதனர்களை , நல்வழி பெறச் , செய்ய விரும்புகிறான் .
* அவர்களுக்கு அறிவை அருள்வதையே , கடமையாகக் கொண்டு , அவர்களுக்கு , அடைக்கலமாய் நிற்கிறான் .
* அடியேனும் , ஞானம் பெற , இந்த , எம்பெருமானைச் , சரணம் அடைகிறேன் !