श्री वरदराज पंचाशत् 50 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதனின் உருவம் , என் உள்ளத்தில் , உறைய வேண்டும் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
व्यातन्वाना ; तरुण , तुलसी , दामभि: ; स्वाम् , अभिख्याम् ;
मातंग - अद्रौ ; मरकत , रुचिम् , पुष्णती ; मानसे , न: ।
भोग - ऐश्वर्य , प्रिय , सहचरै: , का - (अ)पि , लक्ष्मी , कटाक्षै: ;
भूय: , श्यामा ; भुवन , जननी ; देवता , संनिधत्ताम् ! ॥
வ்யாதந்வாநா , தருண , துளஸீ , தாமபி: , ஸ்வாம் , அபிக்க்யாம் ;
மாதங்க - அத்ரௌ ; மரகத , ருசிம் , புஷ்ணதீ ; மாநஸே , ந:
போக - ஐஶ்வர்ய , ப்ரிய , ஸஹசரை: , கா - (அ)பி , லக்ஷ்மீ , கடாக்*ஷை: ;
பூய: , ஶ்யாமா ; புவந , ஜநநீ ; தேவதா , ஸந்நிதத்தாம் ! ||
तरुण ........ பசுமையான ,
तुलसी ....... துழாய் ,
दामभि: ...... மாலைகளாலும் ;
भोग .......... மோக்ஷத்துக்கும் ,
ऐश्वर्य ....... இம்மைச் செல்வத்துக்கும் ;
प्रिय .......... இனிய ,
सहचरै: ...... துணையான ,
लक्ष्मी ........ பெரிய பிராட்டியின் ,
कटाक्षै: ...... கடாக்ஷங்களாலும் ;
भूय: .......... பின்னும் ,
श्यामा ....... மிக்கக் கருமை உடையதும் ;
मातंग अद्रौ .. அத்திகிரியில் ,
स्वाम् ......... தனது ,
अभिख्याम् ... காந்தியை ,
व्यातन्वाना ... பரவச் செய்வதும் ;
मरकत ....... மரகதத்தின் ,
रुचिम् ........ ஒளியை ,
पुष्णती ....... வளர்க்கின்றதும் ;
भुवन .......... உலகுக்குக் ,
जननी ........ காரணமாய் உள்ளதுமான ;
का अपि ......அதி அத்புதமான ,
देवता ......... தெய்வம் (எம்பெருமான்)
न: ............. நமது .
मानसे ......... உள்ளத்தில் ;
संनिधत्ताम् .... எப்பொழுதும் , உறைந்திருக்க வேண்டும் !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* பேரருளாளன் , இயற்கையிலேயே , நீல நிறம் கொண்ட , திரு மேனி உடையவன் . அவன் , மிக பசுமையான , துழாய் மாலை அணிந்திருப்பதால் , அவற்றின் நிறமும் , அவன் திருமேனியில் கூடுகிறது .
* பெருந்தேவியாக அவதரித்துள்ள , பெரியபிராட்டியின் கடாக்ஷத்தால் , அடியார்களுக்கு , இம்மைப் பயனையும் , மறுமைப் பலனையும் , அளிக்க வல்லன. அவள் , தன் திருக்கண்களால் , பேரருளாளனை , நோக்குகிறாள் . அவளுடைய கடாக்ஷங்களின் , நீல நிறமும் , அவன் திருமேனியில் , கூடுகிறது .
* இப்படி , திருத்துழாய் மாலைகளாலும் , பிராட்டியின் கடாக்ஷத்தாலும் , அவனது திருமேனி , பின்னும் நீல நிறம் மிக்கு விளங்குகிறது . இத்தகைய திருமேனி நிறம் , அவன் எழுந்தருளியுள்ள , அத்திகிரி முழுதும் , பரவி வீசுகிறது . அதனால் 'இது மரகதத்தால் ஆகிய மலையோ ' என்ற எண்ணம் , உண்டாகிறது .
* இவ்வாறு பல்வகையிலும் , செறிந்து நிற்கும் , நீல நிறத் திருமேனி கொண்டு , உலகுக்கு காரணமாய் விளங்கும் , பேரருளாளன் , என்னும் பரதேவதை , நம் உள்ளத்தில் , என்னாளும் உறைய வேண்டும் .
********************************************************
[அடுத்து , பல ஶ்ருதியுடன் , இந்த ஸ்தோத்ரம் , நிறைவு பெறும் !]
********************************************************