श्री वरदराज पंचाशत् 45 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! உன் அடியார்கள் , பிறரையும் , மகிழ்விக்கின்றனர் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
भूयो , भूय: , पुलक , निशितै: , अंगकै : , एधमाना: ;
स्थूल: , स्थूलान् , नयन , मुकुलै: , बिभ्रतो , बाष्प , बिन्दून् ।
धन्या: , केचित् ; वरद ! भवत: , संसदम् , भूषयन्त: ;
स्वान्तै: - अन्त: , विनय , निभृतै: ; स्वादयन्ते ! पदम् , ते ॥
பூயோ , பூய: , புலக , நிஶிதை: , அங்ககை: , ஏதமாநா: ;
ஸ்தூல: , ஸ்தூலாந் , நயந , முகுளை: , பிப்ரதோ , பாஷ்ப , பிந்தூந் |
தந்யா: , கேசித் ; வரத ! பவத: , ஸம்ஸதம் , பூஷயந்த: ;
ஸ்வாந்தை: - அந்த: , விநய , நிப்ருதை: ; ஸ்வாதயந்தே ! பதம் , தே ||
वरद ............... வரம் தரும் , பெருமானே !
धन्या: ............. புண்ய சாலிகளான ,
केचित् ............ சில மஹான்கள் ;
भूयो भूय: ......... அடிக்கடி ,
पुलक ............. மயிர்க்கூச்சு ,
निशितै: ........... நிறைந்த ,
अंगकै : ........... அவயவங்களால் ,
एधमाना: ......... மேன்மேலும் , விளங்கியும் ;
स्थूल: स्थूलान् ... மிகப் பருத்துள்ள ,
बाष्प बिन्दून् ..... ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை ,
नयन मुकुलै: ..... மலர்க் கண்களால் ,
बिभ्रतो ............ தாங்கிக்கொண்டும் ;
भवत: ............. உனது ,
संसदम् ........... கோஷ்டியை ,
भूषयन्त: ......... அழகுறச் செய்து கொண்டும் ;
अन्त: ............. உள்ளே ,
विनय ............. பழக்கத்தால் ,
निभृतै: ............ ஒருமைப்பட்டுள்ள ,
स्वान्तै: ............ உள்ளங்களால் ,
ते .................. உன் ,
पदम् .............. திருவடியைப் ,
स्वादयन्ते ......... (பிறருக்கு) இனிக்கச் செய்கின்றனர் !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* வரத்தை அருளும் பெருமானே !
* உனது உறைவிடமாகிய , அத்திகிரியில் வாழும் , பேறுபெற்ற , புண்ணியசாலிகளான , சிலருக்கே , உன்னை , நன்கு , அனுபவிக்கும் பாக்கியம் , கிடைக்கின்றது . எல்லோருக்கும் , கிட்டுவது இல்லை .
* அந்த பாக்கியசாலிகள் , உன் திருமேனியை , நன்கு அனுபவிக்கின்றனர் . அப்பொழுது , அவர்கள் அவயவங்கள எல்லாம், அடிக்கடி , மயிர் சிலிர்த்து நிற்கின்றன . அதனால் , அவர்களின் சரீரமே , பருத்து விட்டது போல் , தோன்றுகிறது .
* அந்த அனுபவத்தால் உண்டான , மகிழ்ச்சியின் மிகுதியால் , அவர்கள் , கண்களில் இருந்து , ஆனந்த கண்ணீர்த் துளிகள் , மிகப்பெரியனவாய் , உதிர்கின்றன .
* இத்தகைய மகான்கள் , உன் திருவடி வாரத்தில் வசிப்பதால் , உன் கோஷ்டியே , அழகு பெறுகிறது .
* அவர்கள் , தங்கள் மனத்தை , வேறொன்றிலும் செல்லவிடாது , உன்னையே நினைத்துப் , பழக்கி , ஒருமைப்படுத்திய படியால் , உன் திருவடிகளை அனுபவிப்பதற்கு , அவர்கள் உள்ளம் , பாங்காய் உள்ளது .
* அவர்கள் , தாங்கள் , அனுபவிப்பது மட்டும் இல்லாமல் , தங்களது அனுபவத்தைப் பார்த்த பிறகும் , உன் திருவடிகளின் இனிமையை , உணர்ந்து , பிறரையும் , அவற்றைச் , சுவைக்குமாறு செய்து , அவர்களின் அனுபவத்தையும் , ரஸ மயமாகச், செய்கின்றனர் !