Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 44 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 44 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��



    श्री वरदराज पंचाशत् 44 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! அக்நி போன்ற உன்னை , அனுதினமும் , த்யாநிக்க , அருள்வாய் !


    ��








    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��


    आहूयमानम् , अनपाय , विभूति , कामै: ;

    आलोक , लुप्त , जगत् - आन्ध्यम् ; अनुस्मरेयम् ! |

    आलोहित - अंशुकम् ; अनाकुल , हेति , जालम् ;

    हैरण्य गर्भ , हयमेध , हविर्भुजम् ; त्वाम् ॥


    ��


    ஆஹூயமாநம் , அநபாய , விபூதி , காமை: ;

    ஆலோக , லுப்த , ஜகத் - ஆந்த்யம் ; அநுஸ்மரேயம் ! |

    ஆலோஹித - அம்சுகம் ; அநாகுல , ஹேதி , ஜாலம் ;

    ஹைரண்ய கர்ப்ப , ஹயமேத , ஹவிர்ப்புஜம் ; த்வாம் ||




    ��


    अनपाय .............. அழிவற்ற ,

    विभूति ................ செல்வத்தை (மோக்ஷத்தை) ,

    कामै: ................. விரும்புபவர்களால் ,

    आहूयमानम् ......... அழைக்கப் படுபவனும் ( ஹோமம் செய்யப்படுபவனும்) ;

    आलोक .............. கடாக்ஷங்களால் (வெளிச்சங்களால்) ,

    लुप्त .................. அழிக்கப் பட்ட ,

    जगत् ................. உலகின் ,

    आन्ध्यम् ............. அறியாமையை ( இருளை) உடையவனும் ;

    आलोहित अंशुकम्.. பீதாம்பரத்தை அணிந்தவனும் ( சிவந்த கிரணங்களை உடையவனும்) ;

    अनाकुल ............. பரபரப்பு (புகை ) இல்லாத ,

    हेति जालम् .......... திரு ஆயுதக் கூட்டத்தை (ஜ்வாலைகளை) உடையவனும் ;

    हैरण्य गर्भ ............ பிரமன் செய்த ,

    हयमेध ............... அசுவமேத வேள்வியின் ,

    हविर्भुजम् ............ ஹவிஸ்ஸை அமுது செய்தவனும் (அக்னி போன்றவனும் ) ஆன

    त्वाम् ................. உன்னை ,

    अनुस्मरेयम् .......... இடைவிடாது , சிந்தித்துக் கொண்டே , இருப்பேனாக !


    ��



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��



    * பேரருளாளப் பெருமானே !

    * பிரமன் , முன்பு செய்த , அஸ்வமேத வேள்வியில் , அவன் தந்த வபை ஆகிய ஹவிஸ்ஸை , நீ அமுது செய்துவிட்டாய் .

    * உலகில் , யாக வேதியில் , யாகம் செய்பவர் ,சேர்க்கும் ஹவிஸ்ஸை , பெறும் , அக்னி போல் நீ விளங்குகிறாய் .

    * தமக்குக் , கேடற்ற செல்வம் , வளர வேண்டும் என்று , விரும்புபவர் , அக்னியில் ஹோமம் செய்வர் .

    * எந்நாளும் அழியாத , மோக்ஷத்தைப் பெற விரும்புபவர் ,உன்னை அழைத்து , உன்னிடம் , ஆத்மாவை ஸமர்ப்பிப்பார் .

    * அக்னி , தனது ஒளி , வீசும் இடத்திலுள்ள , இருளை போக்கவல்லது .

    * நீ உன் கடாக்ஷங்களால் , உலகின் அறியாமையை , ஒழிக்கின்றாய் .

    * அக்னியின் கிரணங்கள் ,செம்மை நிறமுடையன.

    * நீ சிவந்த ஆடையுடன் (பீதாம்பரம்) காட்சி தருகின்றாய் .

    * அக்னி , நன்றாக ஜொலிக்கும் போது , புகை சிறிதும் இருக்காது .

    * உன் கையிலுள்ள திரு ஆயுதங்கள் , பரபரப்பின்றி சாந்தமாக விளங்குவன .

    * இப்படி , அக்நி போல் , விளங்கும் உன்னை , எப்பொழுதும் , சிந்தித்துக்கொண்டே , நிற்கக் கடவேன் !



    ��












Working...
X