श्री वरदराज पंचाशत् 43 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! நீ அருளினால், பூமியே , வைகுண்டமாக , மாறி விடுமே !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
त्वम् , चेत् , प्रसीदसि ; तव , अस्मि , समीपत : , चेत् ;
त्वयि - अस्ति , भक्ति: , अनघा ; करि , शैल , नाथ ! ।
संसृज्यते , यदि , च , दास , जन: , त्वदीय: ;
संसार , एष , भगवन् ! अपवर्ग , एव ॥
த்வம் , சேத் , ப்ரஸீதஸி ; தவ , அஸ்மி , ஸமீபத: , சேத் ;
த்வயி - அஸ்தி , பக்தி: , அநகா: ; கரி , ஶைல , நாத ! |
ஸம்ஸ்ருஜ்யதே , யதி , ச , தாஸ , ஜந: , த்வதீய: ;
ஸம்ஸார , ஏஷ , பகவந் ! , அபவர்க , ஏவ ||
करि शैल नाथ .... அத்தி கிரிப் பெருமானே !
भगवन् ............. கல்யாண குணங்கள் நிறைந்தவனே !
त्वम् ................ நீ ,
प्रसीदसि चेत् ..... திருமுகம் மலர்ந்து , அருளினால் ;
तव ................. உனக்கு ,
समीपत: .......... அருகில் ,
अस्मि चेत् ......... நான் , இருப்பேன் ; ஆனால் ;
त्वयि ............... உன்னிடம்,
अनघा ............. குற்றமற்ற ,
भक्ति: ............. பக்தி ,
अस्ति (चेत्) ...... இருக்குமேயானால் ;
त्वदीय: ............ உன்னுடைய ,
दास जन: ......... அடியார் குழாம்,
संसृज्यते च यदि .. கூட இருக்கும் ; ஆனால் ;
एष ................. இந்த ,
संसार एव ......... ஸம்ஸார மண்டலமே ,
अपवर्ग: ............ மோக்ஷம் ஆகி விடும் !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:
* அத்திகிரி பெருமானே !
* நீ , என் விஷயத்தில் , எப்பொழுதும் , திருமுகம் மலர்ந்து , என்னை , அனுக்ரஹிக்க வேண்டும்
* அடியேன் , உன் அருகில் , இருந்து ; உன் திருமேனியை , எப்பொழுதும் , ஸேவிக்க வேண்டும் .
* உன்னிடம் , எனக்கு , உன் கைங்கரியம் அன்றி , வேறு பயனைக் கொள்ளாத , பக்தி , எப்பொழுதும் இருக்க வேண்டும் .
* உன் , அடியார் கூட்டத்துடன் , கலந்து , பரிமாறவும் ; ஒருவருக்கொருவர் , உன் குணங்களைப் பேசி , அனுபவித்து , மகிழ வேண்டும் .
* இத்தகைய பாக்கியங்கள் , அடியேனுக்கு வாய்க்கும்படி , நீ அருள் புரிந்தால் , இந்த ஸம்ஸார மண்டலத்திலேயே , இத்துணை ஆனந்தங்களைப் பெற்றால் , இவையே மோக்ஷானந்தமாகத் தோன்றிடுமே !