श्री वरदराज पंचाशत् 37 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! உன் ஸங்கல்பமே , என்னைக் காக்குமே !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
किम् , वा ? करीश ! कृपणे , मयि , रक्षणीये ;
धर्म - आदि , बाह्य , सहकारि , गवेषणेन ।
ननु - अस्ति ? विश्व , परिपालन , जागरूक: ,
संकल्प , एव ; भवतो , निपुण: , सहाय: ॥
கிம் , வா ? கரீஶ ! க்ருபணே , மயி , ரக்ஷணீயே ,
தர்ம - ஆதி , பாஹ்ய , ஸஹகாரி , கவேஷணேந |
நநு - அஸ்தி ? விஶ்வ , பரிபாலன , ஜாகரூக: ,
ஸங்கல்ப , ஏவ , பவதோ , நிபுண: , ஸஹாய: ||
करीश ....... அத்தி கிரிப் பெருமானே !
कृपणे ........ வேறு கைம்முதல் அற்ற ,
मयि .......... என்னை ;
रक्षणीये ..... காக்க வேண்டிய , விஷயத்தில் ;
धर्म आदि ... (நித்ய நைமித்திக) தர்மம் முதலிய ,
बाह्य ......... வெளிப்படையான ,
सहकारि .... துணைகளைத் ,
गवेषणेन .... தேடுவதால் ;
किम् वा ..... என்ன பயன் ?
विश्व ........ உலகைக் ,
परिपालन .. காப்பதில் ;
जागरूक: .. கருத்துக் கொண்ட ,
भवत: ....... உனது ,
संकल्प एव .ஸங்கல்பமே ;
निपुण: ..... சாதுரியமுள்ள ,
सहाय: ..... துணையாக ,
अस्ति ननु... இருக்கிறது , அன்றே ?
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* அத்திகிரி பெருமானே !
* கடினமான , பக்தி யோகத்தைச் , செய்ய , அடியேனுக்கு , தகுதியில்லை . அதற்கு வேண்டிய , ஞானம் , சக்தி , ஒன்றுமில்லாதவன் , அடியேன் . ஆதலின் , உன்னை சரணடைந்தேன் .
* இப்படி , உன்னிடம் பிரபத்தியைச் செய்த , என்னை ; நிச்சயமாகக் , காத்தே தீர வேண்டிய , பொறுப்பு , உன்னுடைய தாயிற்று . இப்படி இருக்க , நித்யம் , நைமித்திகம் முதலிய , தர்மங்களை , அடியேன் , வழுவறச் , செய்து வருகிறேனா , என்று , நீ , ஆராய்ந்து பார்ப்பதால் , பயன் ஏதும் இல்லை .
* இவையெல்லாம் , வெளிப்பட்டவைகள் தாமே ! ப்ரபத்திக்கு , நேர் உதவியாக , மாட்டாவே ! உன்னுடைய ஸங்கல்பம் இருக்கிறதே ! உலகம் முழுவதையும் , காப்பதிலேயே , அது , கருத்துக் கொண்டு , எப்பொழுதும் கண்விழித்து , நிற்கிறதே ! இந்த சங்கல்பம் ஒன்றே , என்னை காக்க , உனக்கு ஒப்பற்ற , துணையாய் நிற்கச் சாதுர்யம் பெற்றிருக்கிறது . வேறு துணையை , நீ , ஏன் நாட வேண்டும் ? ஸங்கல்பம் என்னும் உள்நாட்டு பொருள் , உன் கையில் இருக்கும் போது , தர்மம் முதலிய வெளிநாட்டுப் பொருள்களை ,ஏன் தேட வேண்டும் ?