श्री वरदराज पंचाशत् 35 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! எனக்கு , நரகம் வந்தால், உன் பெயர் , என்ன ஆகும் ?
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
भूय: - (अ)पि , हन्त ! वसति: - यदि , मे , भवित्री ;
याम्यासु , दुर्विषह , वृत्तिषु , यातनासु ।
सम्यक् - भविष्यति ! तत: ; "शरणागतानाम् ,
संरक्षिता " इति , बिरुदम् , वरद ! त्वदीयम् ॥
பூய: - (அ)பி , ஹந்த ! வஸதி: - யதி , மே , பவித்ரீ ;
யாம்யாஸு , துர்விஷஹ , வ்ருத்திஷு , யாதநாஸு |
ஸம்யக் - பவிஷ்யதி ! தத: ; ஶரணாகதாநாம் ,
ஸம்ரக்*ஷிதா - இதி , பிருதம் , வரத ! த்வதீயம் ||
वरद ............. வரம் தரும் , பெருமானே !
याम्यासु ......... யமனைச் , சேர்ந்த ;
दुर्विषह .......... பொறுக்க முடியாத , துன்பத்தைத் ,
वृत्तिषु ............ தருகின்ற ;
यातनासु ......... நரக அனுபவங்களில் ;
भूय: अपि ........ மறுபடியும் ;
मे ................. எனக்கு ,
वसति: ........... இருத்தல் ;
भवित्री यदि ...... ஏற்படுமே , ஆகில் ;
तत: .............. அதனால் ;
शरणागतानाम् .. "சரணம் அடைந்தவர்களைக்
संरक्षिता इति ... "காப்பவன் " என்ற ,
त्वदीयम् ......... உன்னுடைய ,
बिरुदम् .......... விருது ;
सम्यक् ........... நன்றாக ,
भविष्यति ........ இருக்குமோ ?
हन्त ............... ஐயோ !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேகாசார்யரின் விளக்கவுரை:
* வரம் தரும் பேரருளாளனே !
* உன்னைச் , சரணம் அடைந்த , எனக்கு , மறுபடியும் , நரகம் சென்று , எமன் செய்யும் , பொறுக்க முடியாத , வேதனைகளை அனுபவிக்கும் , சூழ்நிலை , இனி வராது .
* அப்படி வருமானால் , உன் நிலை என்னாகும் ? ஐயோ ! உன்னை , அடைந்தவனுக்கும் , நரக வேதனை , ஏற்படும் என்றால் , "சரணமடைந்தவரைச் , சீரிய முறையில் , காப்பவன் " என்று , ஒரு விருதை , உலகம் புகழுமாறு , பெற்றிருக்கிறாயே ! அந்த விருது , மிக நன்றாகப் பொருந்துமா ?
* ஆதலின் , விருதைக் காத்துக்கொள்ள வேண்டுமாயின் , எனக்கு , நரக வேதனை ,வராமல் , பார்ப்பது ; உன் கடமை ஆகின்றது !