Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 31 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 31 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��



    श्री वरदराज पंचाशत् 31 / 51







    ��
    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! உன்னை அடைய , நீயே , வழி !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��

    त्वत् - भक्ति , पोतम् - अवलम्बितुम् - अक्षमाणाम् ;

    पारम् , परम् ; वरद ! गन्तुम् - अनीश्वराणाम् ।

    स्वैरम् , लिलंघयिषताम् , भव , वारि राशिम् ;

    त्वाम् - एव , गन्तुम् - असि ! सेतु: - अभंगुर: - त्वम् ॥



    ��



    த்வத் - பக்தி , போதம் - அவலம்பிதும் - அக்ஷமாணாம் ;

    பாரம் , பரம் ; வரத ! கந்தும் - அநீஶ்வராணாம் |

    ஸ்வைரம் , லிலங்கயிஷதாம் , பவ , வாரி ராசிம் ;

    த்வாம் - ஏவ , கந்தும் - அஸி ! , ஸேது: - அபங்குர: - த்வம் ||



    ��



    वरद ............... வரம் தரும் அருளாளனே !

    त्वत् ................ உன்னிடம் ,

    भक्ति .............. செய்யும் பக்தி யோகம் ஆகிய ,

    पोतम् .............. படகை ;

    अवलम्बितुम् ...... கைக் கொள்ள ,

    अक्षमाणाम् ....... இயலாதவர்களும் ;

    भव ................. ஸம்ஸார

    वारि राशिम् ....... ஸாகரத்தை ,

    स्वैरम् .............. தம் இஷ்டப்படி ,

    लिलंघयिषताम् ... கடக்க , விரும்புபவர்களும் ;

    परम्................ மேம்பட்ட ,

    पारम् .............. கரை ஆகிய உன்னை ,

    गन्तुम् .............. அடைவதற்கு ,

    अनीश्वराणाम् .... இயலாதவர்களான , அடியார்களும் ;

    त्वाम् एव ........... உன்னையே ,

    गन्तुम् .............. அடைவதற்கு ,

    त्वम् ................. நீயே ,

    अभंगुर: ............. பழுதடையாத ,

    सेतु: ................ அணையாக (உபாயமாக)

    असि ................ உள்ளாய் !


    ��

    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��

    * வரம் தரும் , அருளாளப் பெருமானே !

    * உலகில் , ஒரு நீர் நிலையைக் , கடக்க விரும்புபவன் , படகு முதலியவற்றைத் , துணை கொள்வது முறை. அப் படகால் , அக்கரை சேருவதற்கு , அறிவு , சக்தி முதலியனவும் வேண்டும். இவை இல்லாதவன் , அக்கரை சேர விரும்பினால் , என்ன ஆவது ?
    அந்த நீர் நிலைக்கு , ஓர் அணை இருப்பின் , இவன் அவ் வழியாக , எளிதில் , கரை சேர்ந்து விடலாம்.

    * அவ்வாறே , ஸம்ஸாரம் எனும் , கடலுக்கு , நீ , அக்கரையாக உள்ளாய். சேதநர் , ஸம்ஸாரம் எனும் கடலைக் கடந்து , அக்கரையாகிய , உன்னை , அடைய வேண்டுமானால் , பக்தி யோகம் எனும் படகு வேண்டும்.

    * இந்தப் பக்தி யோகத்தைச் செய்வதற்கு , இதைப் பற்றிய எல்லா அம்சங்களிலும் , விளக்கமான அறிவு , வேண்டும்.

    * இவ் வறிவு மட்டும் போதாது. இவ்வறிவின்படி , பக்தி யோகத்தை , நேர்மையாய் நடத்த , சக்தியும் வேண்டும். இவை மட்டுமா ?

    * இவற்றுடன் , பக்தியைச் செய்வதற்குச் , சாஸ்த்ரம் அனுமதித்த (அந்தணர் , அரசர் , வைசியர் ஆகிய ) ஜாதிகளுள் , ஒன்றில் , பிறவி வேண்டும்.

    * மேலும் , நெடுங்காலம் கழித்துப் , பலன் பெறுவதில் , பொறுமையும் வேண்டும்.

    * இந்த நான்கு (ஞானம் , சக்தி , ஜாதி , பொறுமை ) அம்சங்களும் , பொருந்தியவன்தான் , பக்தி யோகம் செய்யத் தகுதி , உடையவன் . இந்த நான்கு தகுதிகளில் , ஒன்று , இரண்டு , மூன்று குறைந்தவர் என்ற முறையில் , பலர் இருக்கலாம்.

    * முதல் மூன்று தகுதிகள் , இருந்தும் , காலத் தாழ்வைப் , பொறுக்காமல் , தாம் விரும்பும் காலத்தில் , ஸம்ஸார ஸாகரத்தைக் , கடந்து , முக்தி பெற , விரும்புபவர் பலர் உண்டு.

    * இவ்வாறு , தகுதிக் குறை உடைய , பல்வேறு அதிகாரிகளும் , உன்னை , அடைய , வழி , யாது ? பக்தி யோகமோ , தகுதிக் குறைவால் , பயன் படாததாயிற்று .

    * ஆகவே , அவர்கள் , உன் திருவடிகளில் , சரணம் அடைகின்றனர் . இப்படி , ப்ரபத்தி செய்தவர்கள் விஷயத்தில் , நீயே , பக்தி யோகத்தின் ஸ்தானத்தில் , நிற்கிறாய். ஸம்ஸாரக் கடலைக் கடக்க , நீயே , அழிவற்ற அணையாய் நின்று , உன்னை , எளிதில் அடையுமாறு , செய்கிறாய்.

    * உலகில் , அணையும் , சேரும் இடமும் , வேறு வேறாய் இருக்கும். அணை , பழுது அடைவதும் உண்டு. இங்கு நீயே அணை. சேருமிடமும் நீயே. இந்த அணைக்கு , எந்நாளும் பழுது இல்லை. இது ஓர் அற்புதம்.


    ��








    ��

    Last edited by sridharv1946; 10-08-18, 11:56.
Working...
X