श्री वरदराज पंचाशत् 30 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! உன் நிக்ரஹத்திற்கு , எதிர் அம்பு , எங்கள் அஞ்ஜலியே !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
हस्तीश ! दु:ख , विष , दिग्ध , फल - अनुबन्धिनि ;
आब्रह्म , कीटम् , अपराहत , संप्रयोगे ।
दुष्कर्म , संचय , वशात् - दुरतिक्रमे ; न: ,
प्रत्यस्त्रम् , अंजलि: - असौ ; तव , निग्रह - अस्त्रे ॥
ஹஸ்தீஶ ! து:க்க , விஷ , திக்த , பல - அநுபந்திநி ;
ஆப்ரஹ்ம , கீடம் , அபராஹத , ஸம்ப்ரயோகே |
துஷ்கர்ம , ஸஞ்சய , வஶாத் - துரதிக்ரமே ; ந: ,
ப்ரத்யஸ்த்ரம் , அஞ்சலி: - அஸௌ ; தவ , நிக்ரஹ - அஸ்த்ரே ||
हस्तीश ..... அத்தி கிரிப் பெருமானே !
दु:ख ......... துன்பம் ஆகிய ,
विष .......... நஞ்சினால் ,
दिग्ध ......... பூசப்பட்ட ;
फल .......... பலனை (முனையை) ,
अनुबन्धिनि .. தருவதும் ( உடையதும்) ;
आब्रह्म ....... பிரமன் முதல் ,
कीटम् ........ புழு வரை ;
अपराहत ..... தடுக்கப் படாத ,
संप्रयोगे ...... எய்தலை , உடையதும் ;
दुष्कर्म ........ பாபங்களின் ,
संचयवशात् .. குவியலால் ,
दुरतिक्रमे ..... தவிர்க்க முடியாததும் ஆன ;
तव ............ உன்னுடைய ,
निग्रह .......... நிக்ரஹம் எனும்,
अस्त्रे .......... அம்புக்கு ;
न: ............. எங்களுடைய ,
असौ .......... இந்தக் ,
अंजलि: ....... கை கூப்புதல் ;
प्रत्यस्त्रम् ...... எதிர் அம்பு ஆகும் !
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:
* அத்தி கிரிப் பெருமானே !
* உலகில் , அரசர்கள் , தங்கள் எதிரிகள் ,விரைவில் , அழிந்து போவதற்காக , அம்பின் முனையில் , நஞ்சைப் பூசிப் , பகைவர்கள் மீது எய்வது , வழக்கம்.
* அவ்வாறே , நீ , எல்லையற்ற பாபங்களைச் செய்த , எங்களைப் , பகைவர்களாகக் கருதுகிறாய். எங்களை , நரகத்தில் வீழ்த்துவதற்காக , நிக்ரஹ ஸங்கல்பம் ஆகிய , அம்பை , எங்கள் மீது , வீசப் பார்க்கின்றாய்.
* அதற்காக , முதலில் , துன்பம் கலந்த , சில பலன்களைத் தருகிறது , உன் அந்த ஸங்கலபம் . இது , அம்புக்கு , நஞ்சு தடவுவது போன்றதாகும். இந்த உனது நிக்ரஹ ஸங்கல்பத்தை , யாராவது , தடுக்க முடியுமோ ? பிரமன் முதல் புழு ஆறாக உள்ள ஜீவராசிகள் அனைத்தினிடம் , இது செல்லக் கூடியது. யாராலும் , உன்னைத் தடுக்க முடியாது.
* இப்படி இருக்க , பாபங்களைக் , கணக்கின்றிச் செய்து குவித்த , எங்களால் , உன் ஸங்கல்பத்தைத் தவிர்க்க முடியுமா ? ஆனால் , இப்படி , ஒப்பற்ற வலிமை பெற்ற , உன். நிக்ரஹம் ஸங்கல்பம் ஆகிய , அம்பையும் , கீழே தள்ளிச் சக்தி அற்றதாகச் செய்ய வல்ல ஓர் எதிர் அம்பு எங்களிடம், உள்ளது.
* அது எங்களின் கை கூப்புதல் எனும், அஞ்ஜலியே ஆகும். பக்தியுடன் , அதைச் செய்தால் , உன் நிக்ரஹ ஸங்கல்பம் ஒழிந்து , படிப்படியாய் , வழி கண்டு , மோக்ஷம் வரையில் உள்ள பலனைப் பெற வாய்ப்பு வரும் .