श्री वरदराज पंचाशत् 29 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! உன் அழகை அனுபவித்தவர் , வேறு எதையும் , விரும்பார் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
सद्य: , त्यजन्ति ! वरद ! त्वयि , बद्ध , भावा: ;
पैतामह - आदिषु , पदेषु - अपि , भाव , बन्धम् ।
कस्मै , स्वदेत ? सुख , संचरण - उत्सुकाय ;
कारागृहे , कनक , शृंगलया - अपि , बन्ध: ॥
ஸத்ய: , த்யஜந்தி ! வரத ! த்வயி , பத்த , பாவா: ;
பைதாமஹ - ஆதிஷு , பதேஷு - அபி , பாவ , பந்தம் |
கஸ்மை , ஸ்வதேத ? ஸுக , ஸஞ்சரண - உத்ஸுகாய ;
காராக்ருஹே , கநக , ஶ்ருங்கலயா - அபி , பந்த : ||
वरद ........... வரம் தரும் , பெருமானே !
त्वयि ........... உன்னிடம் ,
बद्ध ............. ஈடுபட்ட ,
भावा: .......... மனம் உடையவர்கள் ;
पैतामह ......... பிரமன் ,
आदिषु ......... முதலியவர்களுடைய ,
पदेषु ............ ஸ்தாநங்களில் ,
अपि ............ கூட ;
भाव ............. உள்ளத்தின் ,
बन्धम् ........... பற்றை ,
सद्य: ............. உடனேயே ,
त्यजन्ति ......... விட்டு விடுகின்றனர் ;
सुख ............. சுகமாகத் ,
संचरण .......... திரிவதில் ;
उत्सुकाय ........ ஆசை உடைய ,
कस्मै ............. எவனுக்கு ,
कारागृहे ......... சிறைக் கூடத்தில் ;
कनक ............ பொன்னாலான ,
शृंगलया अपि ... விலங்கானாலும் ,
बन्ध: ............. கட்டப் படுவது ;
स्वदेत ............ ருசிக்கும் ?
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :
* வரம் தரவல்ல , அருளாளனே !
* உலகில் , பிரமன் , இந்திரன் , முதலிய தேவர்களின் , ஸ்தாநங்கள் ; மிகப் பெரியன .
மிக்க இன்பம் , தருவன. இவற்றைப் பெற , மக்கள் ஆசைப்படுவது , இயல்பே.
* அவர்களும், உன் திருமேனியை ஸேவித்து , அவ்வழகில் , தம் உள்ளம் ஈடு பட்டார்கள் எனில் , உடனே , பிரமன் முதலியோரின் ஸ்தானங்களின் , இருந்த ஆசையை , அடியோடு விட்டு , ஒழிக்கின்றர்.
* கண்டவர் கண்களை , அடிமை கொள்ளும் , உன் திருமேனி அழகை , இடைவிடாது , கண்டு ; சிந்தித்து , அனுபவிக்கும் பரமானந்தத்துக்கும் முன் , பிரமனது , பதம் முதலியன , மிக இழிவாக அல்லவோ , புலப்படும் !
* உலகில் , இஷ்டப்படி திரிய விரும்பும் , ஒருவனை , அவன் உயர்வுக்கு ஏற்றபடி , பொன்னால் செய்த விலங்கைப் பூட்டிச் , சிறையில் வைத்தாலும் , அது , அவனுக்கு , ருசிக்குமா ? எந்த விலங்காய் இருப்பினும் , அவன் இஷ்டப்படியே , திரியத் தடை தானே !
* அவ்வாறே , உன் திருமேனியைப் பரிபூரணமாக அனுபவிக்க விரும்பும் , மஹான்களுக்குப் , பிரமனது பதம் முதலிய , ஸுக ஸ்தானங்களும் , மிக இழிவாகவே , தோன்றும். இவ்வாறு செய்வது , ஒப்பற்ற , உன் திருமேனி அழகு தானே !