श्री वरदराज पंचाशत् 27 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! உன் குணங்களை , மஹான்கள் , காண்கின்றனர் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
सौशीलय , भावित , धिया ; भवता ; कथञ्चित् ;
संछादितान् - अपि , गुणान् ; वरद ! त्वदीयान् |
प्रत्यक्षयन्ति ! अविकलम् ; तव , संनिकृष्टा: ;
पत्यु: - त्विषाम् ; इव , पयोद , वृतान् , मयूखान् ||
ஸௌஶீல்ய , பாவித , தியா ; பவதா ; கதஞ்சித் ;
ஸஞ்சாதிதான் - அபி , குணான் ; வரத ! த்வதீயான் |
ப்ரத்யக்ஷயந்தி ! அவிகலம் ; தவ , ஸந்நிக்ருஷ்டா: ;
பத்யு: - த்விஷாம் ; இவ , பயோத , வ்ருதான் , மயூகான் ||
वरद ........... வரம் தரும் பெருமானே !
सौशील्य ...... சௌசீல்யத்திற்காக ,
भावित ......... உண்டாக்கப்பட்ட ,
धिया ........... ஸங்கல்பத்தை உடைய ,
भवता .......... உன்னால் ;
कथञ्चित् ..... சிரமப்பட்டு ,
संछादितान् .... மறைக்கப்பட்ட
अपि ........... போதிலும் ;
त्वदीयान् ...... உன்னுடைய ,
गुणान् ......... குணங்களை ;
तव ............. உனக்கு ,
संनिकृष्टा: .... நெருங்கிய அடியார்கள் ;
पयोद .......... மேகங்களால் ,
वृतान् .......... மறைக்கப்பட்டாலும் ;
त्विषाम् ........ ஒளிகளுக்குத்
पत्यु: ........... தலைவனான , சூரியனுடைய ,
मयूखान् इव ... கிரணங்களைப் , பார்ப்பது , போல ,
अविकलम् .....குறைவின்றி (பூரணமாக) ;
प्रत्यक्षयन्ति ....நேரில் காண்கின்றனர் !
ஸ்ரீ உப.வே.வ.ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* வரம் தரும் , பெருமானே !
* ஸௌசீல்யம் என்பது , மிகப் பெரியவன் , மிகத் தாழ்ந்தவர்களுடன் , வேற்றுமை இன்றிக் , கலந்து , பழகுவது. இந்தக் குணம் உன்னிடம் நிரம்பி , இருக்கிறது.
* இக் குணத்தையே , மற்றவர்களுக்கு , நன்கு காட்டுவதற்காக , உன் மற்ற குணங்களை , மறைத்துக் கொள்ள வேண்டும் என்று , ஒரு ஸங்கல்பத்தைக் கொண்டு , பெரு முயற்சியோடு , அவற்றை , மறைத்துக் கொள்கிறாய். மற்ற குணங்களைக் காட்டினால் , மக்கள் , உன்னை அணுக அஞ்சி , விலகுவார்கள் என்ற`அச்சத்தால் அன்றோ , அவற்றை , மறைத்துக் கொள்கிறாய்.
* பாமர மக்களுக்கு , அக்குணங்கள் புலப்படாவிடினும் , உன்னுடன் மிக நெருங்கிப் பழகும் பாக்கியம் பெற்ற , திருக்கச்சி நம்பிகள் முதலிய மஹான்களுக்குக் கூடவா , அவை புலப்படாமல் போகும் ?
* சூரியனுடைய ஒளியை , மேகங்கள் மறைக்கின்றன. அப்பொழுது , அவனுடைய கிரணங்கள் , நமக்குப் , புலப்பட மாட்டா. ஆனால் சூரியனுக்கு அருகில் உள்ள , அருணன் முதலியோர்க்குமா , அக்கிரணங்கள் , புலப்படாமல் போகும் ?
* அவ்வாறே , நீ , மறைத்துக் கொள்ளும் , மற்றைக் குணங்களைச் , சில மஹான்கள் , சிறிதும் குறைவின்றிகே கண்கூடாகக் கண்டு , அனுபவிக்கின்றனர்.