श्री वरदराज पंचाशत् 26 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! உன் அவதாரங்களை , உண்மை என்று , உத்தமர் , அறிவார் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
इत्थम् , करीश ! दुरपह्नव , दिव्य , भव्य ,
रूप - अन्वितस्य , विबुध - आदि , विभूति , साम्यात् ।
केचित् - विचित्र , चरितान् , भवत: - अवतारान् ,
सत्यान् ; दया , परवशस्य , विदन्ति ! सन्त: ॥
இத்தம் ,கரீஶ ! துராபஹ்வ , திவ்ய , பவ்ய ,
ரூப - அந்விதஸ்ய , விபுத - ஆதி , விபூதி , ஸாம்யாத் |
கேசித் - விசித்ர , சரிதாந் , பவத: - அவதாராந் ,
ஸத்யாந் ; தயா , பரவஶஸ்ய , விதந்தி , ஸந்த: ॥
करीश ...... அத்தி கிரிப் பெருமானே !
इत्थम् ....... இவ்வாறு ;
दुरपह्नव ..... இல்லை என்று , மறுக்க முடியாததும் ;
दिव्य ........ சுத்த ஸத்வ மயமானதும் ;
भव्य ......... மங்களகரமானதும் ;
रूप .......... திருமேனிகளை ,
अन्वितस्य ... உடையதாயும் ;
दया .......... கருணைக்கு ,
परवशस्य .... வசப்பட்டதாயும் ;
विबुध ........ தேவர்கள் ,
आदि ......... முதலிய ,
विभूति ....... ஆளப்படுபவர்களோடு ,
साम्यात् ...... ஒற்றுமையால் ,
विचित्र ....... விசித்ரமான ,
चरितान् ...... சரித்திரங்களை உடைய ;
भवत: ......... உன்னுடைய ,
अवतारान् .... அவதாரங்களை ;
सत्यान् ....... உண்மையானதாக ,
विदन्ति ....... அறிகின்றனர் !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:
* அத்தி கிரிப் பெருமானே !
* தேவர் , மானிடர் , விலங்குகள் ஆகிய பிராணிகளை அனைத்தும் ,உன் ஆளுகைக்கு , உட்பட்டன.
* அவற்றைப் போன்ற , வடிவங்களை , எடுத்துக் கொண்டு , பல்வேறு அவதாரங்களைச் செய்து , பல்வகை அற்புதச் செயல்களைச் செய்கிறாய். எதற்காக ?
* பெரும் கருணைக்கு வசப்பட்ட நீ , சேதனர்களை , வாழ்விக்கத் தான் , அப்படிச், செய்கிறாய்.
* உன் அவதாரங்கள் பொய் என்று சொல்லி , ஒருவரும் , இல்லையாக்க முடியாது.
* உன் அவதாரத் திருமேனிகளும் , மற்றவர்களின் சரீரம் போல் அன்றி , சுத்த ஸத்வ மயமாய் , மங்களகரங்களாய் உள்ளன.
* அடியார்கள் விருப்பத்திற்குரிய. கட்டுப்பட்டு , அவர்கள் விரும்பிய திருமேனிகளுடன் அவதரிக்கிறாய். நீ இப்படி , அவதாரங்களைச் செய்வது ,இந்த்ர ஜாலம் போல் பொய் யான செயல் என்று , அறிவற்றவர்கள் , பிதற்றுகின்றனர்.
* உன் பெருமைகளை அறிந்த , மஹான்கள் சிலரே , உன் அவதாரங்கள் , அடியார்களைக் காக்க , உண்மையாய் ஏற்பட்டன , என்று அறிகின்றனர்.