Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 23 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 23 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

    ��



    श्री वरदराज पंचाशत् 23 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! பக்தனைக் காக்க , மூவுலகும் , நரஸிம்ஹ கர்ப்பம் ஆனது !




    ��










    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    भक्तस्य , दानव , शिशो: , परिपालनाय ;

    भद्राम् , नृसिंह , कुहनाम् , अधिजग्मुष: , ते |

    स्तम्ब - एक - वर्जम् ; अधुना - (अ)पि ; करीश ! नूनम् ;

    त्रैलोक्यम् - एतत् - अखिलम् ; नरसिंह , गर्भम् ॥



    ��




    பக்தஸ்ய , தாநவ , ஶிஶோ: , பரிபாலநாய ;

    பத்ராம் , ந்ருஸிம்ஹ , குஹநாம் , அதிஜக்முஷ: , தே |

    ஸ்தம்ப - ஏக - வர்ஜம் ; அதுநா - (அ)பி ; கரீஶ ! நூநம் ;

    த்ரைலோக்யம் - ஏதத் - அகிலம் ; நரஸிம்ஹ , கர்ப்பம் ||



    ��





    करीश ......... அத்தி கிரிப் பெருமானே !

    भक्तस्य ........ பக்தன் ஆன ;

    दानव .......... அஸுரச் ,

    शिशो: ......... சிறுவனைக் ,

    परिपालनाय ... காப்பதற்காக ;

    भद्राम् .......... அழகிய ,

    कुहनाम् ........ கபட (அற்புதமான) ,

    नृसिंह .......... நர சிங்கத் திருமேனியை ,

    अधिजग्मुष:....அடைந்த ,

    ते ............... உன்னுடைய ,

    एतत् ........... இந்த ,

    त्रैलोक्यम् ...... மூவுலகம் ,

    अखिलम् ...... முழுவதும் ;


    एक स्तम्ब ..... ஒரு தூணைத் ,

    वर्जम् .......... தவிர ;

    अधुना अपि ... இப் பொழுதும் கூட ,

    नरसिंह ......... நரசிங்க வடிவத்தைக்

    गर्भम् ........... கர்பத்தில் கொண்டுள்ளன.

    नूनम् ........... திண்ணம் !


    ��





    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��

    * பேரருளாளப் பெருமானே !

    * முன்பு , இரணியன் எனும் , அசுரன் , உன்னிடம் பகைமை கொண்டிருந்தான். ஆனால் , அவன் , புதல்வனான , ப்ரஹ்லாதன். எனும், சிறுவன் , உன்னிடம், எல்லையற்ற பக்தி கொண்டு , பரம பாகவதனாய் , உன்னையே , வழிபட்டு , வந்தான். அதற்காக , இரணியன் , தன் புதல்வனிடம் , கடும் சினம் கொண்டு , பல இன்னல்களை , விளைவித்தான்.

    * அப்பொழுது , நீ , சிறுவனைக் காப்பதற்கு , பரம மங்களமாய் , மிக அற்புதமான , நரசிங்க வடிவு கொண்டு , இரணியன் தட்டிய தூணிலிருந்து , அவதரித்து , அவ்வசுரனைக் கொன்று , அவன் புதல்வனுக்கு , அருள் புரிந்தாய்.

    * இரணியன் , எந்த வஸ்துவைக் காட்டி , அதில் , நீ இருக்கிறாயா என்று கேட்டாலும் , அந்த வஸ்துவிலிருந்து , சடக்கென்று தோன்றுவதற்காக , மூவுலகிலும் , உள்ள ஸகல வஸ்துக்களிலும் , நரசிங்க வடிவு கொண்டு , அன்று , நீ அமர்ந்தாய்.

    * அப்பொழுது , அவ்வசுரன் தட்டி , நீ அவதரித்த , ஒரு தூணைத் தவிர , உலகில் உள்ள ஸகல வஸ்துக்களிலும் , இப்பொழுதும், நீ நரசிங்க வடிவத்துடன்,இருக்கிறாய்.

    * ஆகவே , மூவுலகில் உள்ள எல்லாப் பொருள்களும் , நரசிங்க வடிவத்துடன் , உன்னைத் தன்னுள் , சூல் கொண்டு நிற்கின்றன. இது திண்ணம்.



    ��





    Last edited by sridharv1946; 02-08-18, 10:54.
Working...
X