श्री वरदराज पंचाशत् 21 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! மனிதனின் , இதயத்தை , ஏன் , விரும்புகிறாய் ?
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
औदन्वन्ते , महति , सद्मनि ; भासमाने ;
श्लाघ्ये च , दिव्य , सदने ; तमस: , परस्मिन् ।
अन्त: , कलेबरम् - इदम् , सुषिरम् , सुसूक्ष्मम् ;
जातम् , करीश ! कथम् - आदरण - आस्पदम् , ते ॥
ஔதந்வதே , மஹதி , ஸத்மநி ; பாஸமாநே ;
ஶ்லாக்யே ச , திவ்ய , ஸதநே ; தமஸ: , பரஸ்மிந் |
அந்த: , களேபரம் - இதம் , ஸுஷிரம் , ஸுஸூக்ஷ்மம் ;
ஜாதம் , கரீஶ ! கதம் - ஆதரண - ஆஸ்பதம் , தே ||
करीश ..... அத்தி கிரிப் பெருமானே !
औदन्वन्ते .. திருப் பாற்கடலைச் சேர்ந்த ,
महति ....... பெரிய ,
सद्मनि ...... உறைவிடமும் ;
तमस: ...... ப்ரக்ருதி மண்டலத்திற்கு ,
परस्मिन् ... அப்பாற்பட்ட ,
श्लाघ्ये ..... மிகச்சிறந்த ,
दिव्य ....... உயர்ந்த ,
सदने च .... உறைவிடமும் ;
भासमाने ... விளங்கும்போது ,
अन्त: ....... சரீரத்துக்கு ,
कलेबरम् ... உள்ளே இருக்கும் ;
सुसूक्ष्मम् ... மிகச் சிறிய ,
इदम् ........ இந்த ,
सुषिरम् ..... துவாரம் (இதயம்) ஆனது ;
ते ............ உனக்கு ,
कथम् ....... எப்படி ,
आदरण .... விரும்புவதற்கு ,
आस्पदम् ... ஏற்றதாக ,
जातम् ...... ஆயிற்று ?
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* பேரருளாளப் பெருமானே !
* உனக்கு , உறைவிடங்கள் , பல உள :
. பிராட்டி தோன்றிய திருப்பாற்கடல் உள்ளது.
. இந்த ஸம்ஸார மண்டலத்துக்கு மேலே , ஶ்ரீ வைகுண்ட லோகத்தில் , மிக உயர்ந்த , திரு மா மண்டபம் , உள்ளது.
* இத்தகைய , திவ்ய ஸ்தானங்கள் விளங்கும் போது , இவற்றைக் காட்டிலும் , உயர்ந்ததாய் , எண்ணி ; மனிதரின் , இதயத்தில் , மகிழ்வுடன் , உறைகிறாய் !
* இழிவான அம்சங்கள் , சேர்ந்து , அமைந்த ; சரீரத்துக்குள் , மிகவும் , ஸூக்ஷ்மமான , துவாரமாகிய , இதயத்தை , விரும்பி ; உனக்கு , உறைவிடமாகக் ; கொண்டுள்ளாயே : இதற்குக் காரணம் , சேதனர்களிடம் , உனக்கு உள்ள அன்பு தவிர , வேறு , எதுவாக , இருக்க முடியும் ?