श्री वरदराज पंचाशत् 20 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! முனிவர்கள் , இதயத்தில் , உன்னை , த்யானிக்கிறார்கள் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
नाग - अचल - ईश ! निखिल - उपनिषत् - मनीषा ;
मंजूषिका , मरकतम् ; परिचिन्वताम् , त्वाम् ; ।
तन्वी , हृदि , स्पुरति ! का - (अ)पि , शिखा , मुनीनाम् ;
सौदामनी - इव , निभृता , नव , मेघ , गर्भा ॥
நாக - அசல - ஈஶ ! நிகில - உபநிஷத் - மநீஷா ;
மஞ்ஜூஜஷிகா , மரகதம் ; பரிசிந்வதாம் , த்வாம் ; |
தந்வீ , ஹ்ருதி , ஸ்புரதி , கா - (அ)பி , ஶிகா , முநீநாம் ;
ஸௌதாமநீ - இவ , நிப்ருதா , நவ , மேக , கர்ப்பா ||
नाग अचल ईश ... அத்தி கிரிப் பெருமானே !
निखिल ............ எல்லா ,
उपनिषत् ........... உபநிஷத்துகளின் ,
मनीषा ............. கருத்து ஆகிய ,
मंजूषिका .......... பெட்டியில் உள்ள ,
मरकतम् ........... மரகத ரத்நம் ஆன ;
त्वाम् ............... உன்னை ,
परिचिन्वताम् ...... உபாஸிக்கின்றவர்களான ,
मुनीनाम् ............ முனிவர்களின் ,
हृदि ................. உள்ளத்தில் ,
नव .................. புதிய ,
मेघ ................. மேகத்தைத் ,
गर्भा ................. தனக்கு நடுவில் கொண்டு ;
निभृता .............. அசையாமல் இருக்கின்ற ,
सौदामनी ........... மின்னல் ,
इव .................. போல் உள்ள ,
तन्वी ................ சிறிய ,
का अपि ............ விலக்ஷணமான ,
शिखा ............... ஜ்வாலை ,
स्पुरति .............. பிரகாசிக்கிறது !
ஶ்ரீ உப. வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* பேரருளாளப் பெருமானே !
* ஓர் அழகிய , பெட்டகத்துக்குள் ; ஒரு , மரகத ரத்தினம் இருப்பது போல் ; ஸகல உபநிஷத்துகளின் , கருத்துகளிலும் ; மரகத நிறம் , கொண்ட , நீ ; அமர்ந்துள்ளாய் .
அதாவது : எல்லா , உபநிடதங்களும் , உன் பெருமையையே ,பேசுவதால் ; அவற்றின் , தாத்பர்யமாக ; நீ ,விளங்குகிறாய்.
* தவம் புரியும் , முனிவர்களின், இதயத்தில் ; ஓர் அக்நியின், ஜ்வாலை , மிகச், சிறிய வடிவத்துடன் , அசையாமல் ; நிற்கிறது . அந்தச், சுடர் நடுவே , முனிவர்கள் ; கருமுகில் நிறத்தனான , உன்னை ,வைத்துத் , தியானம் செய்கின்றனர்.
* அந்தச், சுடர் நடுவே , நீ , அமர்ந்திருப்பதற்கு ; வானில் , ஒரு மின்னல் அசையாமல் இருந்து , அதன், நடுவே , புதிய மேகம் ஒன்று இருக்குமானால் , அவற்றை , உவமானமாகச் சொல்லலாம் .
* இப்படித் , தங்கள் இதயத்தில் உள்ள , அக்நி ஜ்வாலையின் நடுவே , உன்னைத் தியானம் செய்கின்றனர் , முனிவர்கள் .