श्री वरदराज पंचाशत् 19 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! மஹான்கள் , உன் வ்யூஹ வடிவை , ஊன்றி , த்யாநிக்கிறார்கள் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
रूढ़स्य , चिन्मयतया , हृदये ; करीश !
स्तम्ब - अनुकारि , परिणाम , विशेष , भाज: ।
स्थानेषु , जाग्रति ! चतुर्षु - अपि ; सत्त्ववन्त: ,
शाखा , विभाग , चतुरे ; तव , चातुरात्म्ये ॥
ரூடஸ்ய , சிந்மயதயா , ஹ்ருதயே ; கரீஶ !
ஸ்தம்ப - அநுகாரி , பரிணாம , விஶேஷ , பாஜ: |
ஸ்த்தாநேஷு , ஜாக்ரதி ! சதுர்ஷு - அபி ; ஸத்த்வவந்த: ;
ஶாகா , விபாக , சதுரே ; தவ , சாதுராத்ம்யே ||
करीश ........ அத்தி கிரிப் பெருமானே !
सत्त्ववन्त: ..... ஸத்துவ குணம் மிக்க மஹான்கள் ,
हृदये .......... இதயத்தில் ,
चिन्मयतया ... ஞான வடிவமாய் ;
रूढस्य ........ எழுந்தவனும் ;
स्तम्ब .......... கோரைப் புல் ,
अनुकारि ...... போன்று ;
विशेष ......... ஒரு வகையில் ,
परिणाम ...... மாறுபாட்டை ,
भाज: ......... அடைந்தவனாகவும் ;
तव ............ உன்னுடைய ;
चतुर्षु .......... நான்கு ,
स्थानेषु अपि . இடங்களிலும் ;
शाखा ........ கிளைகளின் ,
विभाग ........ பிரிவால் ,
चतुरे .......... விளங்குகிற ;
चातुरात्म्ये .... நான்கு மூர்த்திகளில் ,
जाग्रति ....... கருத்து , ஊன்றி , நிற்கின்றனர் !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :
* பேர ருளாளப் பெருமானே !
* ஶ்ரீ வைகுண்டத்தில் , "விசாக யூபம்" எனும் , ஒரு தூண் இருக்கிறது. அது , ஞான வடிவமாய் , உள்ளது. அதில் , மேல் கீழாக , நான்கு இடங்கள் உள்ளன. ஒவ்வோர் இடத்திலும் , கோரை முளைத்தாற்போல் , நான்கு திசைகளிலும் , நான்கு கிளைகள் , உண்டு .
* அந்தக் கிளைகளாகவும், நீதான் , வடிவு கொண்டுள்ளாய். ஒவ்வோரிடத்திலும் , உள்ள , நான்கு கிளைகளில் , கிழக்கில் வாஸுதேவ மூர்த்தியும் , தெற்கில் ஸங்கர்ஷண மூர்த்தியும் , மேற்கில் ப்ரத்யும்ந மூர்த்தியும் , வடக்கில் அநிருத்த மூர்த்தியுமாக , வடிவு கொண்டு , நீயே , அமர்ந்துள்ளாய்.
* அடிப் பாகத்தில் உள்ள ,மேற்கூறிய , நான்கு மூர்த்திகளும் , வெளி இந்திரியங்களின் , செயல்களை உடையனவாய் , விழித்து இருப்பன போல் உள்ளன.
* அதற்கு , மேல் இடத்தில் உள்ள , நான்கு மூர்த்திகளும் , வெளி இந்திரியங்களின் செயல் இன்றி , மனத்தின் செயலோடு மட்டும் , சொப்பன நிலையில் உள்ளன.
* அதற்கு , மேல் இடத்தில் உள்ள , நான்கு மூர்த்திகளும் , வெளி இந்திரியங்கள் , மனம் இவற்றின் செயல்கள் இன்றி , உறங்கும் , நிலையில் , உள்ளன.
* அதற்கு மேல் , கடைசி இடத்தில் இருக்கும் , நான்கு மூர்த்திகளும் , மூச்சு விடுதலும் இன்றி , மயக்க நிலையில் உள்ளன.
* இவைகளை மனிதர்கள் உபாஸிக்கும் முறைகள் , ஶ்ரீ பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில் , விளக்கமாய்க் கூறப்பட்டுள்ளன. இம்மூர்த்திகளை உபாஸிப்பவன் , தன் இதயத்தில் , மேற்கூறிய ,விசாகயூபத்தையும் , அதன் நான்கு இடங்களையும் , த்யானிக்க வேண்டும்.
* பின் , ஒவ்வோர் இடத்திலும் , கோரைப் புற்கள் போன்ற நான்கு கிளைகள் வடிவு கொண்ட , நான்கு மூர்த்திகளையும் , த்யானிக்க வேண்டும்.
* அப்பொழுது , அந்தந்த மூர்த்திகளைப் போல் , தானும் , விழித்தல் , சொப்பனம் , உறக்கம் , மயக்கம் ஆகிய நிலைகளில் இருந்து கொண்டு , உபாஸிக்கவேண்டும்.
* ஸத்துவ குணம், தலையெடுக்கப் பெற்ற மஹான்கள் , தங்கள் உள்ளத்திலேயே , உன்னுடைய , நான்கு மூர்த்திகளையும் , கருத்து ஊன்றி ,உபாஸிக்கின்றனர் .