Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 16 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 16 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��


    श्री वरदराज पंचाशत् 16 / 51



    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! பர வாஸுதேவனும் , நீயே ! வ்யூஹ வாஸுதேவனும் , நீயே !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��






    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��
    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    संचिन्तयन्ति ! अखिल , हेय , विपक्ष , भूतम् ;

    शान्त - उदितम् ; शमवता , हृदयेन ; धन्या: ।

    नित्यम् ; परम् ; वरद ! सर्व , गतम् ; सुसूक्ष्मम् ;

    निष्पन्द ,नन्दथु , मयम् ; भवत: , स्वरूपम् ॥



    ஸஞ்சிந்தயந்தி ! அகில , ஹேய , விபக்ஷ , பூதம் ;

    ஶாந்த - உதிதம் , ஶமவதா , ஹ்ருதயேந , தன்யா : |

    நித்யம் , பரம் , வரத ! ஸர்வ , கதம் , ஸுஸூக்ஷ்மம் ,

    நிஷ்பந்த , நந்தது , மயம் , பவத: , ஸ்வரூபம் ||


    वरद .............. வரங்களை , அளிக்கும் , பெருமானே !

    धन्या: ............ பாக்ய சாலிகள் ;

    शमवता .......... அமைதி உள்ள ,

    हृदयेन ............ உள்ளத்தால் ;

    हेय ............... இழி குணங்கள் ,

    अखिल .......... அனைத்துக்கும் ;

    विपक्ष भूतम् ..... எதிரி , ஆகவும் ;

    नित्यम् ........... எந்நாளும் , உள்ளதாகவும் ;

    परम् ............. எல்லாவற்றிலும் , சிறந்ததாகவும் ;

    सर्व गतम् ....... எங்கும் , நிறைந்திருப்பதாகவும் ;

    सुसूक्ष्मम् ....... எங்கும் , உட் புக வல்லதாகவும் ;

    निष्पन्द ......... மாறாத ,

    नन्दथु मयम् .... ஆனந்த , ஸ்வரூபனாகவும் ;

    भवत: ........... உன்னுடைய ,

    शान्त उदितम् .. சாந்தோதிதம் , எனும் ;

    स्वरूपम् ........ திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை ,

    संचिन्तयन्ति .... நன்கு , தியானிக்கின்றனர் !


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * பேரருளாளப் பெருமானே !

    * உன் ஆத்ம ஸ்வரூபம் , திவ்ய ஆத்ம ஸ்வரூபம் என வழங்குகின்றது .
    . அதில் , இழி குணம் , சிறிதும் இல்லை .
    . அது கணக்கற்ற , திருக் கல்யாண குணங்களுக்கு , உறைவிடமாக உள்ளது .
    . எந்நாளும் , மாறுபாடு இல்லாமல் , விளங்குவது .
    . ஸகல வஸ்துக்களை விட மேம்பட்டது.
    . அது இல்லாத இடமே , இல்லை எனும்படி , எல்லாவிடத்திலும் , பரந்து , நிற்பது.
    . ஸகல வஸ்துக்களிலும் , உட்புகும் , திறமை , உடையது .
    . நித்யமான , ஆனந்த , ஸ்வரூபமாய்த் , திகழ்வது .

    * இத்தகைய , பெருமை உள்ள , உன் திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை ; வேறொன்றிலும் , செல்லாதவாறு ; அமைதி உற்ற , உள்ளம் படைத்த , பாக்யவான்கள், சாந்தோதிதம் என்ற நிலையை , உடையதாகத் , தியானிக்கின்றனர் .

    * அதாவது , உனக்கு , நித்யோதிதம் , சாந்தோதிதம் என்ற இரண்டு நிலைகள் உண்டு .
    . நித்யோதிதம் என்பது , ஶ்ரீ வைகுண்டத்தில் , நித்யரும் , முக்தரும் , அனுபவிக்க உரியதாய் , பர வாஸுதேவனாக , நீ , எழுந்தருளி உள்ள நிலை.

    . சாந்தோதிதம் அந்தப் பர வாஸுதேவனிடத்திலிருந்து , தோன்றிய , ஸங்கரஷணன் , ப்ரத்யும்நன் , அநிருத்தன் என்ற மூன்று வ்யூஹ வடிவங்களுக்கும் , காரணமாய் உள்ள , வ்யூஹ வாஸுதேவ ரூபத்துடன் , நீ , நிற்கும், நிலை.

    * தகுதி பெற்ற , பாக்யவான்கள் , பர வாஸுதேவனான, உன்னை , வ்யூஹ வாஸுதேவ நிலையில் வைத்துத் , தியானிக்கின்றனர்.

    [ இந்த சுலோகத்தில் , குறிப்பிட்ட , இரு நிலைகளையும் , வேறு வகையிலும் , பெரியோர்கள் , விளக்கி உள்ளனர்.

    அதாவது , நித்யோதித தசை என்பது பர வாஸுதேவன் , நித்ய விபூதி , லீலா விபூதி , ஆகிய இரண்டையும் , தான் , அனுபவிக்கும் நிலை .

    சாந்தோதித தசை என்பது , அந்த இரு விபூதிகளையும் , விட்டுத் தன் ஸ்வரூபத்தை மட்டும் , தான் அனுபவிக்கும் நிலை என்று கூறுவது உண்டு.

    மற்றோர் உரை ஆசிரியர் , நித்ய விபூதியை , நடத்த வல்ல ஸங்கல்பத்தோடு , எம்பெருமான் கூடிய நிலையை , நித்யோதித தசை என்றும் ;

    லீலா விபூதியை , நடத்தவல்ல , ஸங்கல்பத்தோடு , அவன் கூடிய நிலையை , சாந்தோதித தசை என்றும் , கூறி உள்ளனர் ]













    ��





    Last edited by sridharv1946; 26-07-18, 10:07.
Working...
X