Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 13 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 13 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    🙏


    श्री वरदराज पंचाशत् 13 / 51











    🙏


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    🙏


    வரதா ! உன் கட்டளையே , எல்லோர்க்கும் , சாஸ்த்ரம் !



    🙏





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    🙏







    🙏




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    🙏


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    🙏

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    🙏




    आशा - (अ)धिपेषु , गिरिशेषु , चतुर्मुखेषु - अपि ;

    अव्याहता ; विघि , निषेध , मयी ; तव - आझा ।

    हस्तीश ! नित्यम् ; अनुपालन , लंघनाभ्याम् ;

    पुंसाम् ; शुभ - अशुभ , मयानि , फलानि ; सूते ॥


    🙏





    ஆசா - (அ)திபேஷு , கிரிஶேஷு , சதுர்முகேஷு - அபி ;

    அவ்யாஹதா ; விதி , நிஷேத , மயீ ; தவ - ஆஜ்ஞா |

    ஹஸ்தீஶ ! நித்யம் ; அனுபாலந , லங்கனாப்யாம் ;

    பும்ஸாம் ; ஶுப - அஶுப , மயாநி , பலானி ; ஸூதே ||


    🙏




    हस्तीश ............ அத்தி கிரிப் பெருமானே !

    आशा अधिपेषु .... திக் பாலர்களிடமும் ,

    गिरिशेषु ........... சிவர்களிடமும் ,

    चतुर्मुखेषु अपि .... பிரம்மர்களிடமும் ;

    अव्याहता .......... தடையின்றிச் செல்லும் ;

    विघि ............... விதிப்பதும் ,

    निषेध मयी ........ தடுப்பதும் ஆன ;

    तव ................. உனது ,

    आझा ............. கட்டளை ;

    नित्यम् ............ எப்பொழுதும்,

    अनुपालन ......... நிறைவேற்றுதலாலும் ,

    लंघनाभ्याम् ....... மீறி , நடத்தலாலும் ;

    पुंसाम् ............. மனிதர்களுக்கு ,

    शुभ ................ நல்லனவும் ,

    अशुभ ............. தீயனவும்

    मयानि ............ ஆகிய ,

    फलानि ........... பலன்களை ;

    सूते ............... அளிக்கிறது !


    🙏




    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசர்யரின் விளக்கவுரை :


    🙏




    * அத்தி கிரிப் பெருமானே !

    * இந்திரன் , யமன் முதலிய திக்பாலர்கள் , எண்மர். சிவர்கள் பதினொருவர். இவர்களை அன்றி , நான்முகர்கள் பலர். இந்த மூவகையினரும் , அண்டம் தோறும் , கற்பம் தோறும் , வெவ்வேறாக உள்ளனர். இப்படி , எண்ணிறந்த , திக்பாலர்களும் , சிவர்களும் , பிரம்மர்களுமான அனைவரிடத்தும் , உன் கட்டளை , தடையின்றிச் , செல்லுகின்றன.

    * ஒன்றைச் செய்யுமாறும் , ஒன்றைச் செய்யாதவாறும் , அவர்களுக்கு , நீ , இடும் கட்டளையை , அவர்கள் , மீறி நடக்க முடியாது . நடந்தால் , உரிய தண்டனை பெறுவர்.

    * இத்தகைய உன் கட்டளையை , மானிடர்கள் , சாஸ்திரத்தைக் கொண்டே , அறிய வேண்டும். அதை , அறிந்து , மானிடர்கள் , நீ , விதித்தவற்றைச் செய்தும் ; தடுத்தவற்றைச் செய்யாமலும் ; ஒழுக வேண்டும்.

    * இவ்வாறு , எப்பொழுதும் , நடந்து வந்தால் , மக்களுக்கு , க்*ஷேமம் உண்டாகும். இதற்கு மாறுபட , நடந்தால் , கட்டளையை மீறிய , குற்றத்துக்கு ஆளாகி , நரகம் வரையில் உள்ள தண்டனை பெறுவர் .




    🙏



    Last edited by sridharv1946; 23-07-18, 10:08.
Working...
X