श्री वरदराज पंचाशत् 12 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! நீயே , எல்லாவற்றிற்கும் , காரணம் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
ब्रह्मा - इति ; शंकर - इति ; इन्द्र - इति ; स्वराट् - इति ;
आत्मा - इति ; सर्वम् - इति ; सर्व , चर - अचर - आत्मन् ! ।
हस्तीश ! सर्व , वचसाम् - अवसान , सीमाम् ;
त्वाम् ; सर्व , कारणम् ; उशन्ति ! अनपाय , वाच: ॥
ப்ரஹ்மா - இதி ; ஶங்கர - இதி ; இந்த்ர - இதி ; ஸ்வராட் - இதி ;
ஆத்மா - இதி ; ஸர்வம் -இதி ; ஸர்வ , சர்வ - சர - அசர - ஆத்மந் ! |
ஹஸ்தீஶ ! ஸர்வ , வசஸாம் - அவஸாந , ஸீமாம் ;
த்வாம் ; ஸர்வ , காரணம் ; உஶந்தி ! அநபாய , வாச: ||
सर्व .......... ஸகலமான ,
चर .......... அசையும் ,
अचर ........ அசையாதவை இவற்றிற்கு ;
आत्मन् ...... அந்தர்யாமியாக உள்ள ,
हस्तीश ...... அத்தி கிரிப் பெருமானே !
अनपाय ..... அழிவற்றதான ,
वच: ......... வேத வாக்குகள்
सर्व .......... எல்லாவற்றுக்கும் ,
कारणम् ..... காரணமாய் உள்ள ,
त्वाम् ......... உன்னை ;
ब्रह्मा इति .... பிரமன் என்றும் ,
शंकर इति ... சங்கரன் என்றும் ,
इन्द्र इति ..... இந்திரன் என்றும் ,
स्वराट् इति .. கர்மத்துக்கு , வசப்படாதவன் என்றும் ,
आत्मा इति ...ஆத்மா என்றும் ,
सर्वम् इति .... எல்லாம் என்றும் ,
सर्व ............ எல்லாச்
वचसाम् ....... சொற்களுக்கும் ,
अवसान ....... முடிவான ,
सीमाम् ........ எல்லையாய் ,
उशन्ति ........ விரும்பிப் , பேசுகின்றன !
ஶ்ரீ உப.வே.ஶ்ரீ .வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* பேரருளாளப் பெருமானே !
* அசையாதன , அசைவன ஆகிய பிரபஞ்சம் முழுவதையும் , நீ , சரீரமாகக் கொண்டு , அவற்றுக்கு , ஆத்மாவாக , நிற்கின்றாய் ! மேலும் , எல்லாவற்றிற்கும் , நீயே , காரணமாய் , உள்ளாய் .
* இந்த இரண்டு அம்சங்களையும், கொண்டு , அழியாத மறைகள் , உன்னையே , பிரமன் , சங்கரன் , இந்திரன் , கர்மத்துக்கு , வசப் படாதவன் , ஆத்மா , எல்லா வஸ்துக்களும் , என்று விரும்பிப் , பேசுகின்றன.
* உண்மையில் , இந்தச் சொற்கள் , அனைத்தும் , உன்னையே , குறிப்பிடுகின்றன. ஏனெனில் , நீதானே , எல்லாச் சொற்களுக்கும் , கடைசி எல்லை எனும் , முக்கியப் பொருள் ஆகின்றாய்.
* உலகில், எந்தப் பொருளை , எந்தச், சொல்லால் , கூறினாலும் , அந்தச் சொற்கள் , முடிவில் , உன்னையே , கூறித் தீர வேண்டும். உதாரணமாய் , தேவதத்தன் என்ற சொல்லால் , ஒருவனைக் , குறித்தால் , அப்பெயர் , சரீரத்தைப் பற்றி வந்ததாய் , இருப்பினும் , அந்த சரீரத்தோடு கூடிய , ஜீவனைக் கூறுவதாகவே , கொள்ளப் படுகின்றது , அன்றோ ?
* அவ்வாறே , அவனுடன் , அந்தச் சொல் நிற்காமல் , அந்த ஜீவனுக்கும் , அந்தர்யாமியான , உன்னைக் கூறி அன்றோ , முடிவு பெறுகிறது. ஆகவே , நீ தான் , கடைசி எல்லை ஆகிறாய் .
* ஆகவே , சேதனர்களைப் பற்றிய , பிரமன் முதலிய சொற்கள் , அசேதனத்தைப் , பற்றிய குடம் முதலிய சொற்கள் ஆகிய , எல்லாச் சொற்களும் , அவற்றுக்கு , உயிராய் , அவற்றுக்குக் காரணமாய் , விளங்கும் , உன்னை , முடிவு எல்லையாக , வைத்துக் , கூறியே , நிற்பன என்று மறைகள் , பறை சாற்றுகின்றன.