श्री वरदराज पंचाशत् 10 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! நீ , பிரமன் , சிவன் இவர்களுக்கும் , அந்தராத்மா !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
प्राप्त - उदयेषु , वरद ! त्वत् - अनुप्रवेशात् ,
पद्मासन - आदिषु , शिव - आदिषु , कंचुकेषु ।
तन्मात्र , दर्शन , विलोभित , शेमुषीका: ,
तादात्म्य , मूढ , मतयो , निपतन्ति - अधीरा: ॥
ப்ராப்த - உதயேஷு , வரத ! த்வத் - அநுப்ரவேஶாத் ,
பத்மாஸந - ஆதிஷு , ஶிவ - ஆதிஷு , கஞ்சுகேஷு |
தந்மாத்ர , தர்ஶந , விலோபித , ஶேமுஷீகா:
தாதாத்ம்ய , மூட , மதயோ , நிபதந்தி - அதீரா: ||
वरद ............ வரம் கொடுக்கும் , பெருமானே !
अधीरा: ........ உண்மையான , அறிவு , அற்றவர்கள் ;
त्वत् ............ நீ ,
अनुप्रवेशात् .... உட்புகுந்திருப்பதால் ,
प्राप्त उदयेषु ... தோன்றியவைகளான ;
पद्मासन ........ பிரமன்,
आदिषु ......... முதலியனவும் ;
शिव ............ சிவன் ,
आदिषु ......... முதலியனவும் , ஆன ;
कंचुकेषु ........ (உன்) சட்டைகளில்,
तन्मात्र ......... அந்த சட்டையான , உருவங்களை மட்டும் ,
दर्शन ........... காண்பதால் ;
शेमुषीका: ..... அறிவு ,
विलोभित ...... வஞ்சிக்கப்பட்டதால் ;
तादात्म्य ....... அவர்களோடு , (உன்னை) நினைப்பதால் ,
मूढ मतयो ...... அறிவு கெட்டவர்களாய் ,
निपतन्ति ....... கீழ் நிலைக்கு வந்து , கெடுகின்றனர் !
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:
* பேரருளாளப் பெருமானே !
* பிரமன் , சிவன் முதலிய தேவர்களுக்கும் , உட்புகுந்து , அந்தர்யாமியாய் , இருப்பதால் , அவர்கள் , தோன்றி , நிலை பெற்றுத் , தங்கள் கடமைகளைச் , செய்ய வல்லவர் ஆகின றனர். அவர்கள் , நீ , அணியும் , சட்டை போல் உள்ளனர். அந்தச் சண்டைகளுக்குள் இருந்து , நீயே , அச் செயல்களைச் செய்கின்றாய்.
* இவ்வுண்மையை , அறியாத , பலர் , உன் , சட்டை ஸ்தானத்தில் உள்ள , அந்தத் தேவர்களை மட்டும் கண்டு , மதி இழந்து , அவர்களே , எல்லாம் செய்பவராகக் கருதுகின்றனர் . அதனால் அவர்களுக்கும் மேம்பட்டவனாக , நீ , இருந்து , அவர்கள் வடிவில் , காரியம் செய்வதை , அறியாமல் , அவர்களும் , நீயும், ஒருவரே என , நினைக்கின்றனர்
* இம்மயக்கத்தால் , பின்னும் , ஸம்ஸார ஸமுத்ரத்தில் , விழுந்து , உழல்கின்றனர்.