श्री वरदराज पंचाशत् 08 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! உன் அழகைத் , தேவர்கள் கண்டு , மகிழ்ந்தனர் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
तत् , तत् , पदै: - उपहिते - (अ)पि ; तुरंग - मेधे ;
शक्र - आदयो ; वरद ! पूर्वम् - अलब्ध , भागा: ।
अध्यक्षिते , मख - पतौ , त्वयि ; चक्षुषा - एव ,
हैरण्य - गर्भ , हविषाम् , रसम् - अन्वभूवन् ॥
தத் , தத் , பதை: - உபஹிதே - (அ)பி ; துரங்க , மேதே ;
ஶக்ர - ஆதயோ ; வரத ! பூர்வம் - அலப்த , பாகா: |
அத்யக்*ஷிதே , மக - பதௌ , த்வயி ; சக்*ஷுஷா - ஏவ ,
ஹைரண்ய - கர்ப்ப , ஹவிஷாம் , ரஸம் , அந்வபூவந் ||
वरद ............. பேரருளாளனே !
तुरंग मेधे ....... அச்வமேத யாகத்தில் ,
तत् तत् ......... அந்த அந்த ,
पदै: ............. தேவதைகளைக் கூறும் , சொற்களோடு ,
उपहिते अपि ... கூடியிருந்த போதிலும்,
पूर्वम् ........... முதலில் ,
अलब्ध भागा: .. தங்கள் பாகங்களைப் பெறாத ,
शक्र आदय: ... இந்திரன் முதலிய தேவர்கள் ,
मख पतौ ....... யாகங்களுக்குத் தலைவனான ,
त्वयि ............ நீ ,
अध्यक्षिते ...... நேரில் , ஸேவிக்கப்பட்ட போது ,
हैरण्य गर्भ ...... பிரமன் கொடுத்த ,
हविषाम् ........ ஹவிர்ப் பாகங்களின் ,
रसम् ............ சுவையை ,
चक्षुषा एव ..... கண்ணாலேயே ,
अन्वभूवन् ...... அனுபவித்தனர் !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* பேரருளாளப் பெருமானே !
* பிரமன் , முன் அசுவமேத வேள்வி செய்தபோது , சாஸ்த்ர விதிப்படி , இந்திரன் முதலிய , தேவர்களுடைய பெயர்களைச் சொல்லி , ஹவிரப்பாகங்களை , அக்நியில் ஹோமம் செய்தான் . அக்நியில் , ஹோம ம் செய்யும் , ஹவிஸ்ஸுக்களை , அந்த அந்த தேவர்கள் , அக்நியின் வாயிலாகப் பெறுவதே , சாஸ்த்ர முறை.
* பிரமன் செய்த வேள்வி , எல்லா யாகங்களாலும், ஆதரிக்கப் படும் , தலைவனாய் உள்ள , உன்னையே , உத்தேசித்துச் செய்யப் பட்டது , ஆதலின் , அதில் , நீயே , மறைந்து இருந்து , எல்லா ஹவிஸ்ஸுகளையும் , நேராக , வாங்கிக் கொண்டாய் .
* ஆதலின் , இந்திரன் முதலிய தேவர்கள் , அங்கு , கூடியிருந்தாலும் , தங்கள் பாகங்களைப் பெற முடியவில்லை .
* பின்பு , வேள்வியில் , முக்கியமான ஹவிஸ் ஆகிய , வபையைப் , பிரமன் , ஹோமம் செய்த போது , நீ , அனைவரும் , கண்ணால் காண , எழுந்தருளி , அதை , ஏற்றுக் கொண்டாய். அப்பொழுது , அந்தத் தேவர்கள் , உன் திருமேனி அழகை , ஸேவித்துச் , சுவைத்துப் பருகிக் களித்து , நின்றனர் .
* தாங்கள் , முதலில் பெறாதிருந்த , நாவுக்கான , ஹவிஸ்ஸுகள் அனைத்தினுடைய , ஸாரமே , இந்த உருக் கொண்டதோ எனும்படி , உள்ள , உன் திருமேனியைத் , தங்கள். கண்களாலேயே பருகிப் , பரிபூர்ணத் திருப்தி அடைந்தனர்.
* உன், திருமேனி அழகு , இப்படி , இருக்கிறது !