श्री वरदराज पंचाशत् 05 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
உன் ஸங்கல்பம் இன்றி , எது தான் , நடக்கும் ?
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
मत् - शक्ति , मात्र , गणने ; किम् - इह - अस्ति , शक्यम् ?
शक्येन वा ; तव , करीश ! किम् - अस्ति , साद्यम् ? ।
यदि - अस्ति ; साधय , मया ! तत् - अपि , त्वया , वा !
किम् वा , भवेत् ? भवति , किंचित् - अनीहमाने ॥
மத் - ஶக்தி , மாத்ர , கணனே ; கிம் - இஹ - அஸ்தி , சக்யம் ?
சக்யேன வா ; தவ , கரீஶ ! கிம் - அஸ்தி , ஸாத்யம் ? |
யதி - அஸ்தி ; ஸாதய , மயா ! தத் - அபி , த்வயா , வா !
கிம் வா பவேத் ? பவதி , கிஞ்சித் - அநீஹமாநே ||
करीश ........ அத்தி கிரி நாதனே !
मत् ............ என் ,
शक्ति ......... சக்தி ,
मात्र ........... முழுவதையும் ,
गणने .......... எண்ணிப் பார்த்தாலும் ;
इह ............. இவ்வுலகில் ,
शक्यम् ........ (என்னால்) செய்யக்கூடியது ,
किम् अस्ति ... என்ன இருக்கிறது ?
शक्येन वा .... செய்யக்கூடியது , இருப்பதானாலும் ;
तव ............. உனக்கு ,
साद्यम् ......... அதனால் வரும் பயன் ,
किम् अस्ति .... என்ன உள்ளது ?
अस्ति यदि ..... (ஏதேனும் ) , இருக்குமேயானால் ,
मया ............ என்னைக் கொண்டு ,
साधय .......... செய்துகொள் !
तत् अपि ....... அதுவும் ;
त्वया वा ........ உன்னாலேயே ( செய்யப் பட்டது தானே !)
भवति ........... நீ ,
किंचित् ......... எதையும் ,
अनीहमाने ...... செய்ய விரும்பாத பேது ;
किम् वा ........ எது தான் ,
भवेत् ............ உண்டாகும் ?
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* அத்தி கிரிக்குத் தலைவனாக , அமர்ந்துள்ள , அருளாளப் பெருமாளே !
* உன்னைத் துதிக்க , நான் முற்படுகிறேனே ! எனக்கு உள்ள சக்தியை , ஆராய்ந்து பார்த்தால் , அதை , முழுதும் பயன் படுத்தினாலும் , என்னால் , ஒரு செயலும் செய்ய முடியாது.
* ஒருகால் , நான், ஏதாவது செய்வதாக , ஒத்துக் கொண்டாலும் , பரிபூரணமான விளங்கும், உனக்கு , அதனால் என்ன பயன் வரப்போகிறது ?
* ஒருகால் , அதனால் , உனக்குப், பயன் சிறிதளவாவது விளைவதாக , திருவுள்ளம், இருப்பின் , என்னை , ஒரு கருவியாகக் கொண்டு , நீயே , அதனைச் செய்ய வேண்டும் .
* நீ , என்னைக் கொண்டு , எதைச் செய்தாலும் , நீயே , நேரில் செய்ததாக ஆகும். ஏனெனில் , உன் ஸங்கல்பம் இல்லாதபோது , உலகில் , எந்தக், காரியம், நடைபெறும் ?
* ஆதலின் , நீயே , அடியேனைக் கொண்டு , உன்னைத் துதி செய்து கொள் !