श्री वरदराज पंचाशत् 02 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
வரதா ! என் ஸாஹஸத்தை , ஸஹித்துக்கொள் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
यस्य - अनुभावम् - अधिगन्तुम् - अशक्नुवन्त: ,
मुह्यन्ति - अभंगुर , धियो , मुनि , सार्वभौमा: ।
तस्य - एव , ते , स्तुतिषु ; साहसम् - अश्नुवान : ,
क्षन्तव्य - एष , भवता ; करि - शैल - नाथ ! ॥
யஸ்ய - அநுபாவம் - அதிகந்தும் - அஶக்நுவந்த: ,
முஹ்யந்தி - அபங்குர , தியோ , முனி , ஸார்வபௌமா: |
தஸ்ய - ஏவ , தே , ஸ்துதிஷு ; ஸாஹஸம் - அஶ்நுவாநா: ,
க்ஷந்தவ்ய - ஏஷ , பவதா ; கரி - ஶைல - நாத ! ||
करि शैल नाथ .... ஹஸ்தி கிரித் தலைவனே !
अभंगुर ............ தடை இல்லாத ,
धियो ............. அறிவு உடைய ,
मुनि सार्वभौमा: .. மிகச்சிறந்த , முனிவர்களும் ;
यस्य .............. யாருடைய ,
अनुभावम् ........ பெருமையை ,
अधिगन्तुम् ...... அறிவதற்கு ,
मुह्यन्ति ........... மயங்குகிறார்களோ ;
तस्य एव ......... அத்தகைய ,
ते ................. உன்னுடைய ,
स्तुतिषु ........... ஸ்தோதரத்தைச் , செய்வதில் ,
साहसम् .......... அரும் செயல் புரியத் துணிவை ,
अश्नुवाना: ....... கொள்கிற ;
एष: ............... இந்த நான் ;
भवता ............. உன்னால் ,
क्षन्तव्य : ......... பொறுக்கப்பட வேண்டியவன் !
ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :
* அத்திகிரிப் பெருமானே !
* உலகில் , மிகச் சிறந்த முனிவர்களான , வ்யாஸர் , பராஶரர் முதலிய , பல மஹான்கள் , உளர். அவர்களுடைய அறிவுக்கு , இலக்கு ஆகாதது , ஒன்றும் இல்லை , என்னும்படி , அத்தகைய , ஒப்பற்ற மேதாவிகள் , அவர்கள். அவர்களே , உன் பெருமையை அறிவதற்கு , சக்தி அற்றவர்களாய் , அறிவு மயங்கித் , தடுமாறுகின்றனர்.
* இப்படி , நிகரற்ற பெருமையை உடைய , உன்னைச் , சிற்றறிவினனான நான் , சிறிது , துதிக்க முற்படுவதே , பெரிய துணிவுச் செயல். அத்துடன் நில்லாது , பலவாறு , உன்னைத் துதிக்கவும் , தொடங்குகிறேன். இது , மிகப்பெரிய , துணிவுச் செயல் ஆகும்.
* இது , உனக்குச் செய்யும் , ஓர் , அபராதச் செயல் ஆகும். இதற்காக , அடியேனைப் பொறுக்குமாறு , வேண்டுகிறேன் !