श्री वरदराज पंचाशत् 01 / 51
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்
நம் , வரதன் , நமக்கு , எல்லா , நலன்களையும் , நல்கட்டும் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் முன்னுரை :
* இந்த ஸ்தோத்ரம், காஞ்சீபுரத்தில் , கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள , ஶ்ரீ வரதராஜப் பெருமாளைப் பற்றி , ஶ்ரீ தேசிகன் அருளிச் செய்தது . இவ்வெம்பெருமானைப் பற்றிய , ஐம்பது சுலோகங்கள், கொண்டமை பற்றி , இந்த ஸ்தோத்ரத்திற்கு , இப் பெயர் ஏற்பட்டது .
* காஞ்சி க்*ஷேத்ரம் , ஸ்வயம் வ்யக்தம் ஆகும். முத்தி தரும், தலங்கள் எனப் புராணங்களில் வழங்கும் , அயோத்தி , மதுரை , மாயா , காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை என்ற ஏழு தலங்களுள் , காஞ்சீபுரம் , முக்கியமானது ஆகும் , என்று , ஶ்ரீ தேசிகன் , திருவுள்ளம் .
* இதற்குப் , "பெருமாள் கோவில்" என்ற பெயர் , ஸம்ப்ரதாய வழக்காய் , வந்தது. இங்கு , எம்பெருமான் , ஒரு ,சிறு மலையின் மேல் , எழுந்தருளி , இருக்கிறான். இந்த மலைக்கு , அத்திகிரி என்று பெயர்.
* இவ்வூரில் செய்யும் விரதங்களுக்குப் பலன், கிடைப்பது , உறுதி ஆதலின் , "ஸத்யவ்ரதம்" ( மெய் விரதம் ) என்ற பெயராலும், இந்தத்தலம் வழங்கும் .
* இவ்வெம்பெருமானுக்கு , வட மொழியில் , வரதன் , தேவாதிராஜன் , தேவராஜன் என்றும் , தமிழ்மொழியில் , அருளாளன் , பேர்ருளாளன் , தேவப் பெருமாள் என்றும் , திரு நாமங்கள் உள்ளன.
* இத்தலத்தில் , எம்பெருமான் , பேரருளாளனாக , அர்ச்சை வடிவுகொண்டு , தோன்றிய வரலாறு , அற்புதமானது. முன்பு , கிருத யுகத்தில் , பிரமன் , எம்பெருமானை , நேரில் , ஸேவிக்க விரும்பிக் , கடுந்தவம் புரிந்தான் . பலன், கிட்டவில்லை.
* ஓர் அசரீரி வாக்குப்படி , இந்த ஸத்யவ்ரத க்*ஷேத்ரத்துக்கு வந்து , இங்கே , அத்திகிரியை , யாக வேதி ஆக்கிப் , பெரியதோர் , அச்வமேத யாகம், செய்தான். வேள்வியின் முடிவில், அக்நியில் , வபையை ஹோமம் செய்தான்.
* அந்த யாக வேதியிலிருந்து , ஒரு , பெரிய ஒளியும், அதன் நடுவில், புண்யகோடி விமானமும் , தோன்றின. அவ்விமானத்தின் நடுவில், தேஜோமயனாய்ப் , பேரருளாளன் , தோன்றினான் . அவனை , ஸேவித்து , ஆனந்தம் , மிக மிக எய்திய பிரமன் , தன் விருப்பம் நிறைவேறப் பெற்றான்.
* இந்த க்*ஷேத்ரத்திலேயே , என்றென்றும் , அர்ச்சை வடிவில்,எழுந்தருளி , இருக்குமாறு , பிரார்த்தித்தான் . பேரருளாளனும் , அதற்கு இசைந்து , இங்கேயே , கோயில் கொண்டான்.
* இப்படிக் , க்ருத யுகத்திலேயே , அர்ச்சை வடிவு மேற்கொண்ட , பேரருளாளனுக்கு , ஒவ்வோர் ஆண்டிலும் , வைகாசி மாதத்தில் , மஹோத்ஸவத்தைப் , பிரமனே , வந்து , நடத்துவதாய் , ஐதிஹ்யம் உண்டு.
* இம்மஹோத்ஸவத்தின் சிறப்பைப் , பாரத நாட்டில் , வேறு எங்கும் காண முடியாது. இவ்வுத்ஸவத்தில் , பேரருளாளன் , ஸகல விபவங்களுடனும் , காலையும் , மாலையும் , எழுந்தருளும் காட்சி , ஒரு பெருங்கடல் , அலை முழக்கத்துடன், கரை புரண்டு வருவது போல் இருக்கும்.
* நம் தேசிகன் அவதரித்த , தூப்புல் என்ற இடம் , இத்தலத்தில் , ஒரு பகுதியில் , உள்ளது. இதனாலும் , இத்தலத்தின் பெருமை , மிகுந்து , நிற்கும்.
* இந்த ஸ்தோத்ரத்தில் , மற்ற ஸ்தோத்ரங்களில் இல்லாத , சில விசேஷங்களை , ஶ்ரீ தேசிகன் அமைத்துப் பாடி உள்ளார். இதில் , பேரருளாளனை , உபநிஷத்துகள் முதலியன , போற்றும் வழியில் , துதித்ததோடு , நிற்கவில்லை.
* மஹோத்ஸவத்தில், வாஹனங்கள் , திருத் தேர் , திருப் பல்லக்கு , முதலியவற்றில் , எழுந்தருளும் காட்சிகளை எல்லாம் , இந்த ஸ்தோத்ரத்தில் , பேசுகின்றார். திருவாபரணம் , கவசம் முதலியவற்றைக் களைந்து , நிற்கும் காட்சியையும் , திருப் பள்ளி அறையில், பெருந்தேவிப் பிராட்டியுடன் , சேர்த்தியில் , இருந்த சின்னத்தோடு , அங்கிருந்து , எழுந்திருக்கும் ,நிலையையும் , ஸேவிக்க ஆசைப் பட்டதை , இந்த ஸ்தோத்ரத்தில் காணலாம்.
* பேரருளாளன் , திருமேனி அழகை , இடைவிடாது , ஸேவிக்கப் பெறின் , தமக்கு , ஶ்ரீவைகுண்ட வாஸத்திலும் , ஆசை இல்லை , என்பதை, ஶ்ரீ தேசிகன் , ஆணையிட்டுப் பேசியதும் , இந்த ஸ்தோத்ரத்தில் தான் .
द्विरद , शिखरि ,सीम्ना , सद्मवान् ; पद्मयोने: ,
तुरग , सवन , वेद्याम् , श्यामलो , हव्यवाह : ।
कलश , जलधि, कन्या , वल्लरी , कल्पशाखी ;
कलयतु ! कुशलम् , न: , कोऽपि , कारुण्य , राशि: ॥
த்விரத , ஶிகரி , ஸீம்நா, ஸத்மவாந் ; பத்மயோநே: ,
துரக , ஸவந , வேத்யாம் , ஶ்யாமளோ , ஹவ்யவாஹ: |
கலச , ஜலதி , கந்யா , வல்லரீ , கல்பசாகீ ;
கலயது ! குஶலம் , ந: , கோ(அ)பி , காருண்ய , ராசி : ||
द्विरद शिखरि ..... ஹஸ்தி கிரியின் ,
सीम्ना ............. மேற் பகுதியை ,
सद्मवान् ........... உறைவிடமாக , உடையவனும் ;
पद्मयोने: .......... திரு உந்தித் தாமரையில் , உதித்த , பிரமனது ,
तुरग सवन ........ அசுவ மேத யாகத்தின் ,
वेद्याम् ............. வேதியில் ,
श्यामलो .......... கருமை நிறம் கொண்ட ,
हव्यवाह : ........ அக்நியாய் , நின்றவனும் ;
कलश जलधि ... திருப் பாற்கடலில் அவதரித்த ,
कन्या ............. பிராட்டி ஆகிய ,
वल्लरी ........... கொடியோடு , கூடிய ,
कल्प शाखी ..... கற்பக மரம் போன்றவனும் ;
को(अ)पि ........ விலக்ஷணனான ,
कारुण्य .......... கருணையே ,
राशि: ............ திரண்ட வடிவானவனும் , ஆன பேரருளாளன் ;
न: ................ நமக்கு ,
कुशलम् ......... க்*ஷேமத்தை ,
कलयतु ......... அருள வேண்டும் !
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* பெரியதான , ஹஸ்திகிரியின் மேற்பகுதியில் , தனக்கு, உறைவிடத்தை , அமைத்துக் கொண்டான் , பேரருளாளன்.
* பிரமன் , முன்பு , அசுவமேத யாகம் செய்தான். அந்த யாக வேதியில் , பேரருளாளன் , தானே வந்து , அவதரித்தான். அதில் , கரு நிறம் கொண்டு , வந்து , தோன்றிய , அக்நியோ என்று , கருதுமாறு , ஜ்வலித்தான் , தேவப் பெருமாள் .
* உலகில் , கொடி , மரத்தைச் , சார்ந்து , மேலே , படர்ந்து , போகும். திருப் பாற்கடல் அமுதத்துத் தோன்றிய , பெருந்தேவியாகிய கொடி , ஸகல பலங்களையும் , அருளவல்ல , பேரருளாளன் எனும் கற்பக மரத்தைச் சார்ந்து , மிகத் திகழ்கின்றது.
* இவனுக்கு , இயற்கையாய் உள்ள கருணை , பெருந்தேவியின் சேர்த்தியால் , மிகுந்து , நிற்பதால் , கருணையே , இவன் உருவில் , திரண்டு , நிற்கிறதோ எனும்படி , திகழ்கிறான், பேரருளாளன் .
* இவ்வெம்பெருமான் , நமக்கு , மோக்ஷம் வரையில் உள்ள , எல்லா நலங்களையும் , அருள வேண்டும் !