श्री भूस्तुति : 31 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
தாயே ! என்னைக் கடாக்ஷிப்பாய் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
ताप , त्रयीम् , निरवधिम् ; भवती , दया - (आ)र्द्रा: ,
संसार , घर्म , जनिताम् ; सपदि , क्षिपन्त: |
मात: ! भजन्तु ! मधुर - अमृत , वर्ष , मैत्रीम् ;
माया , वराह , दयिते ! मयि , ते , कटाक्षा: ॥
தாப , த்ரயீம் , நிரவதிம் ; பவதீ , தயா - (ஆ)ர்த்ரா: ,
ஸம்ஸார , கர்ம , ஜநிதாம் ; ஸபதி , க்*ஷிபந்த: |
மாத: ! பஜந்து ! மதுர - அம்ருத , வர்ஷ, மைத்ரீம் ;
மாயா , வராஹ , தயிதே ! மயி , தே , கடாக்*ஷா: ||
मात: ......... தாயே !
माया ......... தன் ஸங்கல்பத்தால் , அவதரித்த ;
वराह ......... வராஹப் பெருமானுக்கு ,
दयिते ........ மனைவியே !
भवती ........ தங்களுடைய ,
दया .......... கருணையால் ,
आर्द्रा: ........ குளிர்ந்ததும் ;
संसार ........ ஸம்ஸாரம் எனும் ,
घर्म ........... கோடையால் ,
जनिताम् ..... உண்டாக்கப்பட்ட ,
निरवधिम् .... எல்லையற்ற ,
तापत्रयीम् ... மூன்று தாபங்களையும் ;
सपदि ........ உடனே
क्षिपन्त: ...... ஒழிக்கக் கூடிய ,
ते ............. உன்னுடைய
कटाक्षा: ..... கடாக்ஷங்கள் ,
मयि ......... அடியேன் விஷயத்தில்,
मधुर ......... இனிய ,
अमृत ........ அமுத ,
वर्ष ........... மாரியின் ,
मैत्रीम् ........ ஒற்றுமையை ,
भजन्तु ....... அடைய வேண்டும் !
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* உலகுக்குத் தாயே !
* தன் ஸங்கல்பத்தால் ,வராஹத் திருமேனி கொண்டு , அவதரித்த , எம்பெருமானுடைய , மனைவியாகிய , பூமிப் பிராட்டியே !
* ஸம்ஸார மண்டலம் என்பதே , ஒரு கோடை ஆகும். அதனால் , மூன்று, தாபங்களும் , எல்லையின்றி , உண்டாகிச் ,சேதநர்களை , வாட்டுகின்றன.
* அவற்றை , உடனே , ஒழிப்பதற்கு , உன் கருணையால், குளிர்ந்து வரும் கடாக்ஷங்களே , வல்லமை உடையன.
* அத்தகைய , உன் கடாக்ஷங்கள், அடியேன் மீது , இனிய மாரி போல் , விழுந்து , அடியேனுடைய , தாபங்களையும், தீர்த்து , இன்பமுறச், செய்து , அருள வேண்டும.
[ மூன்று தாபங்கள் :
1. ஆத்யாத்மீகம் : சரீரத்தைப் , பற்றி வரும் , தலை நோய் , ஜல தோஷம் , முதலியனவும் , மனத்தைப் பற்றிவரும் , காமம் ,கோபம் , பயம் முதலியன .
2. ஆதி பௌதீகம் : மிருகம் , பக்ஷி , மனித வர்க்கம் முதலிய பூதங்களால் வருவன .
3. ஆதி தைவீகம் : குளிர் , சூடு , காற்று , மழை , முதலியவற்றால் , தெய்வீகமாக வருபவை .]