श्री भूस्तुति : 28 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
பூமிப் பிராட்டியே ! நீயே , உபாயம் ஆகிறாய் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
प्रत्येकम् , अब्ध , नियुतै: - अपि , दुर्व्यपोहात् ;
प्राप्ते , विपाक , समये ; जनित - अनुतापात् ।
नित्य - अपराध , निवहात् - चकितस्य , जन्तो: ;
गन्तुम् , मुकुन्द , चरणौ ; शरणम् ! क्षमे ! त्वम् ॥
ப்ரத்யேகம் , அப்த , நியுதை: - அபி , துர்வ்யபோஹாத் ;
ப்ராப்தே , விபாக , ஸமயே ; ஜநித - அநுதாபாத் |
நித்ய - அபராத , நிவஹாத் - சகிதஸ்ய , ஜந்தோ: ;
கந்தும் , முகுந்த , சரணௌ ; ஶரணம் ! க்ஷமே ! த்வம் ||
क्षमे ........... பூமிப் பிராட்டியே !
नियुतै: ........ லக்ஷக் கணக்கான ,
अब्ध ......... ஆண்டுகளாலும் ,
अपि .......... கூட ;
प्रत्येकम् ...... ஒவ்வொன்றாய்ப் ,
दुर्व्यपोहात् ... போக்க முடியாமல் ;
विपाक ....... பலன் தரும் ,
समये ......... காலம் ,
प्राप्ते ......... வரும்போது ;
अनुतापात् .... பச்சாத்தாபத்தை ,
जनित ......... உண்டாக்கக் கூடிய ;
नित्य .......... இடைவிடாது , செய்த ,
अपराध ....... பாபக் ,
निवहात् ....... கூட்டத்துக்கு ,
चकितस्य ..... அஞ்சிய ,
जन्तो: ......... பிராணிக்கு ;
मुकुन्द ......... எம்பெருமான் ,
चरणौ ......... திருவடிகளை ,
गन्तुम् ......... அடைவதற்கு ;
त्वम् ........... நீயே ,
शरणम् ....... உபாயம் , ஆகிறாய் !
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:
* பூமிப் பிராட்டியே !
* சேதனன் , செய்த , பாபங்களில் , ஒவ்வொரு பாபத்திற்கும் , லக்ஷக் கணக்கான ஆண்டுகள் , பிராயச்சித்தம் செய்தாலும் ; அல்லது , பலனை , அனுபவித்தாலும் ; பாபம் கழிவதாய் , இல்லை .
* அவனுடைய , பாபங்கள் , பலனைத் தர , முற்படும்போது தான் , "ஐயோ ! இத்தகைய பாபத்தைப் , பின் வரப் போகும் , பலனை , அறியாது , செய்தேனே " என்று பச்சாத்தாபம் உண்டாகிறது. அந்தப் பாபங்களின் பலனை , அனுபவிப்பதற்கு , அஞ்சுகிறான்.
* இந்த நிலையில் , பொறுமையே , வடிவு கொண்ட நீ , அஅவனுக்காக , எம்பெருமானிடம் , பரிந்து , பேசுகிறாய் . அவனது , கோபம் , தணிகிறது.
* பின் , அவன் திருவடிகளைச் , சேதனன் , அடைந்து , நலம் பெற , நீயே , உபாயம் , ஆகிறாய் !