Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 27 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : தாயே ! உ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 27 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : தாயே ! உ

    ��


    श्री भूस्तुति : 27 / 33







    ��


    ஸ்ரீ பூஸ்துதி :




    தாயே ! உன் கருணையால் , எம்பெருமானும் , அருள்கிறான் !


    ��








    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��








    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ��


    उद्वेल , कल्मष , परंपरितात् - अमर्षात् ,

    उत्तम्सितेन , हरिम् ; अंजलिना - (अ)पि , अदृष्यम् ।

    आकस्मिको - (अ)यम् , अधिगम्यति ! प्रजानाम् ;

    अंब ! त्वदीय , करुणा , परिणाम , एव ।।


    ��


    உத்வேல , கல்மஷ , பரம்பரிதாத் - அமர்ஷாத் ,

    உத்தம்ஸிதேந , ஹரிம் ; அஞ்ஜலிநா - (அ)பி , அத்ருஷ்யம் |

    ஆகஸ்மிகோ - (அ)யம் , அதிகம்யதி ! ப்ரஜாநாம் ;

    அம்ப ! த்வதீய , கருணா , பரிணாம , ஏவ ||



    ��



    अम्ब ......... தாயே !

    उद्वेल ......... எல்லையை , மீறிய ,

    कल्मष ....... பாபங்களால் ;

    परंपरितात्.... மிகுதியாக , உண்டாக்கப்பட்ட ,

    अमर्षात् ...... கோபத்தால் ;

    उत्तम्सितेन ... தலை மேல் , கூப்பிய ,

    अंजलिना .... அஞ்சலியால் ,

    अपि .......... கூட ;

    अदृष्यम् ...... இணக்க முடியாத ,

    हरिम् .......... எம்பெருமானை ;

    आकस्मिको .. தற்செயலாக ஏற்பட்ட ,

    अयम् .......... இந்த ,

    त्वदीय ......... உன்னுடைய ,

    करुणा ........ கருணையின் ,

    परिणाम ....... பரிபக்குவ நிலை ,

    एव ............. மட்டுமே ;

    प्रजानाम् ....... பக்தர்களுக்கு ,

    अधिगम्यति ... அணுக , எளியவனாக ஆக்குகிறது !



    ��



    ஶ்ரீ உப. வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * தாயே ! பூமிப் பிராட்டியே !

    * சேதநர்கள் செய்யும் பாபங்களுக்கு , எல்லை இல்லை . அதனால், உன் நாயகனான எம் பெருமானுக்குக் , கோபம் , மிகுதியாக , உண்டாகிறது . அப்போது , சேதநர்கள் , அவனை , அணுக , அஞ்சுகின்றனர் .

    * தலை மேல் கைகளைக் கூப்பினால் , எம்பெருமானுடைய , எல்லாக் கோபங்களும் , நீங்கும் , என , சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு செய்தால் கூட , அவனை , நெருங்க விடாமல் , பின் வாங்கச் , செய்கிறது , சேதனர்களின் , பாபச் சுமைகள்.

    * அச் சமயத்தில் , முந்தைய நல் வினை , சிறிது , இருந்ததால் , சேதனர்களிடம் , உனக்கு , இயற்கையான கருணை , சடக்கென்று , முதிர்ச்சி அடைந்து , எம்பெருமானிடம் , அவர்களுக்காக , உன்னைப் பரிந்து , பேசச் செய்கிறது.

    * அதனால் , அவன் கோபம் நீங்குகிறது. அப்பொழுது , சேதநர்கள், எளிதில் , அவனை , அணுகி , நலம் , பெறுகின்றனர் .




    ��




    Last edited by sridharv1946; 04-07-18, 08:58.
Working...
X