श्री भूस्तुति : 19 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
எம்பெருமான் மார்பில் , நீ , மின்னுகிறாய் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
भर्तु: , तमाल , रुचिरे , भुज , मध्य , भागे ;
पर्याय , मौक्तिकवती , पृषतै: , पयोधे: ।
ताप - अनुबन्ध , शमनी , जगताम् , त्रयाणाम् ;
तारा , पथे , स्फुरसि ! तारकिता , निशा - इव ॥
பர்த்து : ; தமால , ருசிரே ; புஜ , மத்ய பாகே ;
பர்யாய , மௌக்திகவதீ ; ப்ருஷதை : , பயோதே: |
தாப - அநுபந்த , சமநீ ; ஜகதாம் , த்ரயாணாம் ;
தாரா , பதே ; ஸ்புரஸி ! தாரகிதா , நிசா - இவ ||
त्रयाणाम् ......... மூன்று ,
जगताम् .......... உலகங்களுக்கும் ;
ताप .............. தாபங்கள் ,
अनुबन्ध .......... தொடர்வதை ;
शमनी ............ ஒழிப்பவளான , நீ ;
पर्याय ............ போலி ,
मौक्तिकवती .... முத்துகள் போன்று (உன் திருமேனியில்) ;
पयोधे: ........... கடலினுடைய ,
पृषतै: ............. நீர்த்திவலைகளுடன் ;
तमाल ............ பச்சிலை போல ,
रुचिरे ............ அழகிய (நீலமான) ,
भर्तु: .............. கணவனுடைய ,
भुज मध्य भागे ...திருமார்பில் (இருக்கும்போது ) ;
तारा पथे ......... ஆகாயத்தில் ,
तारकिता .......... நட்சத்திரங்களுடன் உள்ள,
निशा इव ......... இரவு போல ,
स्पुरसि ............ விளங்குகிறாய் !
ஶ்ரீ உப வே வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:
* பூமிப் பிராட்டியே !
* மூவுலகிலும் , உள்ள ; எல்லோர்க்கும் ; எல்லா வகைத் துன்பங்களையும் , ஒழித்து , அருள்பவள் , நீ .
* கடலின் வெண்ணிறமான, நீர்த்திவலைகள் ; உன் திருமேனி முழுவதும் , தெறித்திருப்பதைப் , பார்க்கும்போது ; முத்துக்களைப் , பதித்தாற்போல் , இருக்கிறது . உனது திருமேனி , இரவு போல் , கரிய நிறம் , கொண்டது .
* எம்பெருமானின் திருமேனி , நிறம் , பச்சிலை போல , நீலமானது . அவனது , திருமார்பில் , நீ , அமர்ந்து உள்ளாய் . இந்த நிலையில் , உன்னை , ஸேவிக்கும்போது , நீல நிறமான ஆகாயத்தில் , வெண்மையான , நட்சத்திரங்கள் , ஆங்காங்கு , ஒளி , வீசுகின்ற , இரவு போல் தோன்றுகிறாய் !