श्री भूस्तुति : 18 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
தாயே ! பகவான் தோளில் அமர்ந்து , நீ , ஆட்சி ,புரிகிறாய் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
अन्योन्य , संबलन , जृम्भित , तूर्य , घोषै: ;
संवर्त , सिन्धु , सलिलै: , विहित - अभिषेका ।
एक - आतपत्रयसि ! विश्वम् - इदम् ; गुणै: , स्वै: ;
अध्यास्य ; भर्तु: , अधिक - उन्नतम् - अंस , पीठम् ॥
அந்யோந்ய , ஸம்பலந , ஜ்ரும்பித , தூர்ய , கோஷை: ;
ஸம்வர்த்த , ஸிந்து , ஸலிலை: , விஹித - அபிஷேகா |
ஏக - ஆதபத்ரயஸி ! விஶ்வம் - இதம் ; குணை: , ஸ்வை: ;
அத்யாஸ்ய ; பர்த்து: அதிக - உந்நதம் -அம்ஸ , பீடம்||
अन्योन्य ....... ஒன்றுக்கொன்று ,
संबलन ........ மோதிக்கொள்வதால் ;
जृम्भित ........ அதிகமாய் , எழுந்த ,
तूर्य ............. வாத்யங்களின் ,
घोषै: ........... ஒலியை உடைய ;
संवर्त ........... பிரளய காலக் ,
सिन्धु ........... கடல் ,
सलिलै: ........ நீரால் ;
अभिषेका ...... பட்டாபிஷேகம் ,
विहित .......... செய்யப்பட்டு ;
भर्तु: ............ கணவனான , வராஹப் பெருமானுடைய ,
अधिक ......... மிகவும் ,
उन्नत ........... உயரந்த ,
अम्स ........... தோள் ஆகிய ;
पीठम् .......... ஸிம்ஹாஸனத்தில் ,
अध्यास्य ...... அமர்ந்து ;
स्वै: ............ தன்னுடைய ,
गुणै: .......... குணங்களால் ;
इदम् .......... இந்த ,
विश्वम् ....... உலகத்தை ;
एक ........... ஒற்றைக்
आतपत्रयसि...குடையின் கீழ் , ஆளுகிறாய் !
ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாச்சார்யரின் , விளக்கவுரை :
* பூமிப் பிராட்டியே !
* உலகில் , ஒரு பேரரசனுக்கு , முடி சூட்டு விழாவின் போது ,
. பல்வகை வாத்யங்கள் , முழங்க ;
. கடல் நீரால் , அவனை , நீராட்டி ;
. ஓரு சிங்காதனத்தில் , அமரச்செய்து ;
. பட்டாபிஷேகம் , செய்வதும் ;
. அதன் , பின் ; தன் நற்குனங்களால் , அவ்வரசன் ; மக்களை , மகிழ்வித்துக் கொண்டு
. உலகை , ஒற்றைக் குடையின் கீழ் , ஆள்வதும் , உலக முறை .
* நீ , இவ்வுலகுக்கே , சக்ரவர்த்தினியாக , முடி சூடி , நிற்கிறாய் .
* உன் முடி சூட்டு விழாவிற்குக் , கடலின் அலைகள் தான் வாத்தியங்கள். கடல்களும் , கடல்களின் அலைகளும் , ஒன்றோடு , ஒன்று , மோதிக் கொள்வதால் , உண்டாகும் ஒலிகள் , வாத்தியங்களின் , முழக்கங்கள் ,ஆகின்றன.
* பிரளய காலத்துக் கடல் நீர் முழுவதும் , உன் திருமஞ்சனத்திற்குப் பயன்பட்டன.
* உன் நாயகனான , வராஹப் பெருமானது , மிக உயரமான தோளே , உனக்கு , ஏற்ற ,சிங்காதனம் ஆகியது . அதில் , ஏறி , அமர்கிறாய்.
* உனக்குத் துணையாக , உன் திருக்குணங்களே , ஆகின்றன. அவற்றைக் கொண்டு , உலகை மகிழ்வித்து , உன் ஆணைக்கு அடங்கி , ஒற்றை வெண்குடை நிழலில் , ஆட்சி , புரிகிறாய் .